Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாய் சுதர்சன் சொதப்பினால் 'வீட்டுக்குத் தான்' போகணும்.. IND vs AFG டெஸ்ட் போட்டிதான் கடைசி வாய்ப்பு

சண்டிகர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களம் இறங்கும் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு, தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் அவர் சொதப்பினால், டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

சண்டிகரில் உள்ள புதிய மைதானத்தில் இன்று (ஜூன் 6) ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், சாய் சுதர்சனுக்கு ஆதரவாகப் பேசினாலும், இப்போட்டியில் அவர் சோபிக்கத் தவறினால் அடுத்த முறை வாய்ப்பு கிடைப்பது கடினம். ஏனெனில் தேவ்தத் படிக்கல் போன்ற மாற்று வீரர்கள் தங்களது வாய்ப்புக்காக நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்.

Sai Sudharsan Faces Make-or-Break Test Against Afghanistan to Save His Spot in India Squad

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் சாய் சுதர்சனின் செயல்பாடு பெரிய அளவில் ஈர்க்கும்படி இல்லை. இதுவரை விளையாடியுள்ள 11 இன்னிங்ஸ்களில் அவர் வெறும் 2 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் அறிமுகமான அவர், அங்கு 6 இன்னிங்ஸ்களில் 1 அரைசதமும், அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக 3 இன்னிங்ஸ்களில் 1 அரைசதமும் மட்டுமே அடித்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களிடம் சிக்கி 2 இன்னிங்ஸ்களில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

உள்நாட்டில் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சொதப்பியது தேர்வுக்குழுவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரது டெஸ்ட் பேட்டிங் உத்தியும் பலவீனமாக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 700 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினாலும், இரண்டு முறை பேட்டின் பிடியை நழுவவிட்டு ஹிட்-விக்கெட்டாகி ஆட்டமிழந்தார்.

டி20-யில் இருந்து டெஸ்ட்

கடந்த மே 31 அன்று ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடிய சாய் சுதர்சன், அடுத்த சில நாட்களிலேயே முற்றிலும் மாறுபட்ட டெஸ்ட் போட்டிக்குத் தயாராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பந்துகளை அடிக்காமல் விட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உடனடியாக மாறுவது அவருக்கு எளிதானதாக இருக்காது.

IND vs AFG டெஸ்ட் போட்டியில் மெகா சாதனையை செய்யப் போகும் ரிஷப் பண்ட்.. இன்னும் எத்தனை 6 அடிக்கணும்?

IND vs AFG டெஸ்ட் போட்டியில் மெகா சாதனையை செய்யப் போகும் ரிஷப் பண்ட்.. இன்னும் எத்தனை 6 அடிக்கணும்?

கடைசி வாய்ப்பு?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்டில் இந்திய அணி இரண்டு முறை பேட்டிங் செய்ய வாய்ப்பு மிகக் குறைவு. எனவே, தனக்குக் கிடைக்கப்போகும் அந்த ஒரே இன்னிங்ஸில் 24 வயது சாய் சுதர்சன் பெரிய ஸ்கோர் அடித்தே ஆக வேண்டும். இல்லையெனில், அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்படலாம்.

Story first published: Saturday, June 6, 2026, 8:57 [IST]
Other articles published on Jun 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+