Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த எதிர்காலம் இனி இந்த தமிழக வீரர் தான்.. ஆகாஷ் சோப்ரா கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் எதிர்காலம் தமிழக வீரர் சாய் சுதர்சன் தான் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி பேட்டிங் சொதப்பியதால் தோல்வியை தழுவியது.இதனால் இந்திய அணியில் அதிரடி மாற்றங்களை நிகழ்த்த தேர்வு குழுவினர் யோசித்து வருகின்றனர்.

விராட் கோலி ,ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, இந்திய அணியில் ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சொன்னால் என் மனதுக்கு முதலில் வருபவர் சாய் சுதர்சன் தான் என்று கூறியுள்ளார்.

akash chopra on sai sudharsan

மேலும் பேசிய அவர், இந்திய பேட்டிங்கின் எதிர்காலமாக சாய் சுதர்சன் விளங்குவார். ஜெய்ஷ்வால் ஏற்கனவே இருக்கிறார். கில் நம்பர் நான்காவது வீரராக எதிர்காலத்தில் களமிறங்க கூடும். பண்டும் இருக்கின்றார். எனவே இந்த மூன்று வீரர்களும் இந்திய அணியின் தூண்களாக விளங்க கூடும். இதைத் தவிர கே எல் ராகுலும் உங்களுக்கு தொடக்க வீரராக செயல்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

கேஎல் ராகுல் இந்திய அணியின் சீனியர் வீரராக இருக்கின்றார். தொடக்க வீரராகவும் அவரால் விளையாட முடியும். எனவே அவரையும் டெஸ்ட் அணியில் நீங்கள் கொஞ்ச நாள் வைத்திருக்க வேண்டும். எனினும் கேஎல் ராகுல் கிரிக்கெட்டை விட்டு சென்று விட்டால் தொடக்க வீரர்களிடம் காலி ஆகிவிடும். இதேபோன்று விராட் கோலி கிரிக்கெட்டை விட்டு சென்று விட்டாலும் கில் நான்காவது வீரராக களம் இறங்கக் கூடும்.

கில்லுக்கு அந்த இடம் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். சாய் சுதர்சன் இதுவரை 28 முதல் தர டெஸ்ட் போட்டி விளையாடி 1948 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 41 என்ற அளவில் இருக்கிறது.

அதிகபட்ச ஸ்கோர் 213 ரன்கள் ஆகும். 23 வயதான சாய் சுதர்சன் இதுவரை இந்திய அணிக்காக மூன்று சர்வதேச ஒரு நாள் போட்டியிலும் ஒரு டி20 போட்டிகள் விளையாடி இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் சாய் சுதர்சன் 127 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 62 ரன்கள் ஆகும்.

Story first published: Thursday, January 16, 2025, 16:06 [IST]
Other articles published on Jan 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+