Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SMAT 2025: 55 பந்துகளில் சதம் விளாசி தெறிக்கவிட்ட சாய் சுதர்சன்.. தமிழக அணிக்கு 3வது வெற்றி

அகமதாபாத்: டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிர்பார்த்த அளவில் சோபிக்காத சாய் சுதர்சன், சையது முஷ்டாக் அலி டிராபி 2025 தொடரில் அதிரடி சதமடித்து தனது ஃபார்மிற்குத் திரும்பினார். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், சவுராஷ்டிராவுக்கு எதிரான சூப்பர் லீக் போட்டியில், தமிழ்நாடு அணிக்காக அபாரமாக ஆடினார்.

டெஸ்ட் போட்டிகளில் தடுமாறிய சாய் சுதர்சன், 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் குவித்து அசத்தினார். சவுராஷ்டிரா நிர்ணயித்த 184 ரன்கள் இலக்கை தமிழ்நாடு அணி வெற்றிக்கரமாக துரத்தியது. அணியின் மற்ற பேட்ஸ்மேன்களில் மூவர் மட்டுமே இரண்டிலக்க ரன்களை எடுக்க, சுதர்சன் தனி ஒருவராக ஜொலித்தார்.

Sai sudharsan

24 வயதான சென்னை வீரரான சுதர்சன், இப்போட்டிக்கு முன் பேட்டிங்கில் சவாலான காலகட்டத்தை சந்தித்தார். இந்திய டெஸ்ட் அணியின் மூன்றாவது வரிசைக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீரால் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவரது ஆட்டம் விமர்சனத்துக்குள்ளானது. அவர் விளையாடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில் இரண்டே அரைசதங்களுடன், இங்கிலாந்து சுற்றுப்பயணம் முதல் உள்நாட்டுப் போட்டிகள் வரை தடுமாறினார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டெல்லியில் அடித்த 87 ரன்கள் மட்டும் தான் அவரது சிறந்த டெஸ்ட் ஆட்டமாகும்.கௌஹாத்தியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா கண்ட மோசமான ஆட்டத்திற்குப் பின், சுதர்சன் தமிழ்நாடு அணிக்காக மீண்டும் களமிறங்கினார்.

சையது முஷ்டாக் அலி தொடர் ஆரம்பத்தில் சற்றுத் தடுமாறினாலும், கடைசி இரண்டு போட்டிகளில் தனது ஃபார்மிற்குத் திரும்பினார். முந்தைய ஆட்டத்தில் ஜார்க்கண்டுக்கு எதிராக 64 ரன்கள் எடுத்தார். இந்த சதத்தில் 10 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.

இந்த போட்டியில் தமிழ்நாடு வென்றாலும், நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. Elite 'டி' பிரிவில், விளையாடிய ஏழு ஆட்டங்களில் மூன்று வெற்றி மற்றும் நான்கு தோல்விகளுடன் நான்காவது இடத்திலேயே உள்ளது. சாய் சுதர்சன், விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சாய் சுதர்சனின் இந்த ஆட்டம் ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

Story first published: Tuesday, December 9, 2025, 0:00 [IST]
Other articles published on Dec 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+