10 சி கேட்ட டோணி: 3 சி-க்கு சைஃப் அலி கானை ஒப்பந்தம் செய்த சூட் நிறுவனம்
மும்பை: சூட் விளம்பரத்தில் நடிக்க டோணிக்கு வந்த வாய்ப்பு அவர் கேட்ட பெரிய தொகையால் நடிகர் சைஃப் அலி கானுக்கு சென்றுவிட்டது.
பிரபல சூட் நிறுவனம் தங்கள் விளம்பரத்தில் நடிக்க, பிராண்ட் அம்பாசிடராக இருக்குமாறு கேட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியை அணுகியுள்ளது. டோணி ரூ.10 கோடி சம்பளம் கேட்டுள்ளார். அவர் கூறிய தொகையை கேட்ட சூட் நிறுவனம் அங்கிருந்து கிளம்பியது.

இதையடுத்து பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை அணுகியபோது அவரோ டோணி கேட்டதில் மூன்றில் ஒரு பங்கு தொகையையே சம்பளமாக கேட்டுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த நிறுவனம் சைஃப் அலி கானை தங்கள் பிராண்ட் அம்பாசிடராக நியமித்து ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது.
சைஃப் அலி கானுக்கு ரூ.3 கோடி சம்பளம் வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. டோணி விளம்பர படங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications