Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யம்மாடியோவ்..!! இந்த காரோட விலை ரூ.1 கோடி.. அது அவருக்கு தான்.. கொடுக்கிறது இவரு தான்..!!

டெல்லி: தோனிக்கு அவரது மனைவி சாக்ஷி, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாக அளிக்க காத்திருக்கிறார்.

வாகனங்களை வாங்குவதில் மற்ற வீரர்களை காட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர் தோனி. பைக்குகள், கார்கள் என ஏராளமானவற்றை வாங்கி குவித்திருக்கிறார்.

தற்போது இந்திய ராணுவத்துடன் பயிற்சியினை ஜம்மு காஷ்மீர் பகுதியில் மேற்கொண்டு வருகிறார். அவருடைய பயிற்சி காலம் ஆகஸ்ட் 15ம் தேதி லே பகுதியில் கொடியேற்றத்துடன் முடிவடைகிறது.

விலை உயர்ந்த கார்

விலை உயர்ந்த கார்

இந்நிலையில் அவரது மனைவி தோனிக்காக விலை உயர்ந்த புதிய கார் ஒன்றினை வாங்கி அவரது வீட்டில் நிறுத்தியுள்ளார். அந்த காரை புகைப்படம் எடுத்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீட்டுக்கு வந்தது

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: வெல்கம் ஹோம்.. ரெட் பீஸ்ட், தோனி உங்களின் புதிய விளையாட்டு பொருளாக இந்த கார் நம் வீடு வந்து சேர்ந்து விட்டது.

முதல் நபர்

முதல் நபர்

மகி..!! உங்களை பெரிதும் மிஸ் செய்கிறேன். இந்த கார் இந்தியாவின் குடிமகன் என்ற அடையாளத்துக்காக காத்திருக்கிறது, ஏன் என்றால் இந்த காரை வைத்திருக்கும் முதல் இந்தியர் நீங்கள் தான் என்று கூறியிருக்கிறார்.

1 கோடி ரூபாய்

1 கோடி ரூபாய்

இந்த காரின் விலை இந்திய மதிப்பில் 1 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த கார் கிராண்ட் செரோக்கே வகை கார் ஆகும். தோனியிடம் ஏற்கனவே, பெராரி 599 GTO, ஹம்மர் H2 ஆகிய கார்கள் உள்ளன. Suzuki hayabusha, Kawasaki ninja H2 ஆகிய பைக்குகள் உள்ளன.

Story first published: Sunday, August 11, 2019, 12:44 [IST]
Other articles published on Aug 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+