நள்ளிரவில் களைகட்டிய கொண்டாட்டம்... கையில் குழந்தையுடன் தோனி.. ஏனென்றால் சாக்ஷியின் பிறந்தநாள்!
ராஞ்சி : இன்று தனது 32வது பிறந்தநாளை முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி சாக்ஷி தோனி கொண்டாடி வருகிறார்.
இதையொட்டி நள்ளிரவில் நண்பர்கள் சூழ அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தோனி தன்னுடைய குழந்தை ஜிவாவை கையில் ஏந்தியபடி போஸ் கொடுத்துள்ளார்.

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் மனைவி சாக்ஷி தோனி தன்னுடைய 32வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதைமுன்னிட்டு நேற்று நள்ளிரவில் அவர் தன்னுடைய கணவர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் தோனி தன்னுடைய மகள் ஜிவாவை தூக்கியபடி போஸ் கொடுத்துள்ளார். அவர் முன்பு டேபிளில் இரண்டு பெரிய கேக்குகள் இருந்தன. அனைவரது முகத்திலும் சந்தோஷம் மேலோங்கி இருந்தது. எப்போதும் சமூக
வலைதளங்களில்கூட தன்னை தொடர்ந்து பரபரப்பாக வைத்துக் கொள்ளும் சாக்ஷிக்கு பிறந்தநாளையொட்டி வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications