Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

100ல் இருந்து 10ஐ எத்தனவாட்டி கழிக்கலாம்? முட்டை யாருக்கு சொந்தம்.. சாக்ஷியை கலாய்க்கும் மோகித்

ஹைதராபாத்:சென்னை அணியின் மோகித் சர்மா கேட்கும் குறும்பு கேள்விகளால் எப்போதும் கலகலப்பாக காட்சியளிக்கிறது சென்னை முகாம்.

ஐபிஎல் தொடரில் அனைவராலும் விரும்பப்படும் அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். தல தோனி, சின்ன தல ரெய்னா, ஜடேஜா, ராயுடு, பிராவோ என பிரபலங்கள் மட்டுமல்லாமல் தமிழ் புலவர் ஹர்பஜன் சிங், இம்ரான் தாகிர் ஆகியோர் உள்ளனர்.

அவ்வப்போது அந்த அணி வீரர்கள் செய்யும் சேட்டைகள், விளையாட்டுகளுக்கு பஞ்சமில்லை. இணையத்தில் அதிகளவு விரும்பப்படும் வீடியோக்களும் சென்னை அணி தொடர்பானது தான்.

மோகித் சேட்டைகள்

மோகித் சேட்டைகள்

கலகலப்பான சென்னை அணியில் ஹர்பஜன், ரெய்னா போன்று அனைவரையும் கலாய்க்கும் நபர் மோகித் சர்மா. தோனியின் மனைவி சாக்ஷி, ஜடேஜா என எல்லாரையும் கலாய்த்து தள்ளும் அவரது சேட்டைகள் அடங்கிய வீடியோக்கள் தான் இப்போ வைரல்.

குறும்பு கேள்விகள்

சாக்ஷி தோனி, கரண் சர்மா, ஜடேஜா மற்றும் மோனு குமாரிடம் குறும்புத் தனமாக கேள்விகளை கேட்கிறார் மோகித் சர்மா. அதில், சாக்ஷி தோனியிடம் 100ல் இருந்து பத்தை எத்தனை முறை கழிக்கலாம் என்று கேள்வி கேட்கிறார்.

சொதப்பும் சாக்ஷி

சொதப்பும் சாக்ஷி

அதற்கு சாக்ஷியோ 100 முறை என்று முதலில் பதில் சொல்கிறார். பின்னர் யோசித்து... இல்லை இல்லை 10 முறை என்று சொதப்பி தள்ளுகிறார். ஆனால் அந்த பதிலை ஏற்காக மோகித்தோ, ஒரு முறை தான் என்று கூறுகிறார்.

மடக்கும் மோகித்

மடக்கும் மோகித்

100ல் இருந்து 10ஐ கழித்தால் 90 தானே இருக்கும். பிறகு எப்படி 100ல் இருந்து கழிக்க முடியும் என்று சாக்ஷியை கேட்டு வியக்க வைக்கிறார் மோகித்.

யாருக்கு முட்டை?

யாருக்கு முட்டை?

அதே போல் ஜடேஜாவை அவர் விட்டுவிடவில்லை. அவரிடம் உங்கள் வீட்டு கோழி பக்கத்து வீட்டில் முட்டை போட்டால் அந்த முட்டை யாருக்கு சொந்தம் என்று கேட்கிறார். அப்படி, இப்படி என யோசிக்கும் ஜடேஜாவோ... கோழிக்கு தானே சொந்தம் என கூறி அசத்துகிறார்.

Story first published: Friday, March 29, 2019, 15:18 [IST]
Other articles published on Mar 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+