பைக்கை எங்க நிறுத்தணுமோ.. அங்கே நிறுத்துங்க பாஸ்.. தோனிக்கு குட்டு வைத்தாரா சாக்ஷி?
ராஞ்சி: பைக்கை வீட்டு வாசலில் குண்டக்க மண்டக்க நிறுத்தியிருந்த தோனிக்கு அவரது மனைவி சாக்ஷி குட்டு வைத்து மெசேஜ் போட்டதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
தோனி பேட் பிரியர் மட்டுமல்ல.. பைக் பிரியரும் கூட.. .பைக் கிடைத்து விட்டால் போதும், ஓய்வு கிடைத்து விட்டால் போதும்.. கிளம்பி விடுவார். அப்படி ஒரு பைக் மோகம் அவருக்கு. அவர் ஓட்டாத பைக்கே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விதம் விதமான பைக்குகளில் சவாரி விட்டுள்ளார். அவரிடம் அரியவகை பைக் கலெக்ஷன்களும் உள்ளன.
தற்போது ஐபிஎல் போட்டிகள் தள்ளிப் போடப்பட்டுள்ள இந்த சூழலில் ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் ஹாயாக இருக்கிறார் தோனி. அங்கு பேட்மிண்டன் ஆடுவது போல ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார். மேலும் சாலையில் பைக்கை எடுத்துக் கொண்டு ரவுண்டு அடித்த வீடியோவும் வெளியானது.

வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திய தோனி
இந்த நிலையில் அவர் தனது வீட்டு வாசலில் குண்டக்க மண்டக்க பைக்கை நிறுத்தியிருப்பது போலவும், அதை அவரது மனைவி பார்த்து என்னய்யா இது பைக்கை இப்படி நிறுத்தியிருக்கீங்க என்று கலாய்த்துத் தள்ளியதாகவும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. தோனி - சாக்ஷி மாதிரியான ஒரு ஹேப்பியான, ஜாலியான, நல்ல புரிதலுடன் கூடிய தம்பதியை பார்க்க முடியாது. அப்படி ஒரு குடும்பம் இவர்களுடையது. கூடவே அவர்களது குட்டி மகள்.

வைரலாகும் பைக் வீடியோ
இந்த நிலையில் சுபன் என்பவர் போட்டுள்ள ஒரு டிவீட்டில் ஒரு வீடியோ உள்ளது. அதில் ஒரு பிரமாண்ட பைக் வீட்டு வாசலில் நிற்கிறது. அந்த வீடியோவில் ஒரு வாசகம் இடம் பெற்றுள்ளது. அதில், பைக்கை எங்கே நிறுத்த வேண்டுமோ அந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்று போட்டு மகேந்திர சிங் தோனியின் டிவிட்டருடன் டேக் செய்யப்பட்டுள்ளது.

சாக்ஷி தோனி எப்போது வெளியிட்டார்
இந்த செய்தியை சாக்ஷி எப்போது வெளியிட்டார் என்று தெரியவில்லை. அவரது டிவிட்டர் பக்கத்திலும் இது இல்லை, இன்ஸ்டாவிலும் இல்லை. ஒரு வேளை வேறு வீடியோவை எடுத்து இப்படி யாரேனும் மாற்றி வெளியிட்டுள்ளனரா என்றும் தெரியவில்லை. ஆனால் இது இப்போது வைரலாகி வருகிறது. தோனி இப்படியெல்லாம் தப்பான இடத்தில் வண்டியை பார்க் பண்ண மாட்டார் என்றே தெரிகிறது.

சுட்டிக் காட்டுவது நல்ல விஷயம்தான்
ஆனால் இந்த வீடியோவில் சாக்ஷி தனது காரில் வீட்டுக்கு வந்தபோது வீட்டு வாசலில் பைக் இப்படி நிற்பதைப் பார்த்து இந்த மெசேஜைப் போட்டதாகவும் இந்த வீடியோ சொல்கிறது. இது உண்மையோ பொய்யோ.. மனைவின்னா இப்படித்தான் குட்டு வைக்கணும் கணவரை அவ்வப்போது.. இல்லாட்டி இப்படித்தான் தப்புத் தப்பா பண்ணிட்டிருப்பாங்க.. என்னங்க நாம சொல்றது?


Click it and Unblock the Notifications