Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏம்மா.. ரொம்ப நேரமா கதறிட்டு இருக்கோம்.. இப்ப வந்து சொல்றீங்க.. இருந்தாலும் தோனி ரசிகர்கள் ஹேப்பி!

Recommended Video

Dhoni may retire today gossip spreads fast in twitter

மும்பை : தோனி ஓய்வு பெறப் போவதாக வந்த செய்திகள் வதந்தி தான் என தெரிய வந்துள்ளது.

தோனியின் மனைவி சாக்ஷி, மூன்றே வார்த்தைகளில் அந்த செய்திகள் எல்லாமே வதந்தி தான் என நச்சென்று கூறி இருக்கிறார்.

இன்று காலையில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் தோனி ஓய்வு குறித்த செய்திகள் பரவின.

ஏழு மணிக்கு..

ஏழு மணிக்கு..

முதலில் தோனி ஏழு மணிக்கு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார் என செய்திகள் வலம் வந்தன. மறுபுறம் விராட் கோலி தோனியை புகழும் வண்ணம் ஒரு பதிவை போட்டார்.

வதந்தியை உருவாக்கினர்

வதந்தியை உருவாக்கினர்

அந்த இரண்டையும் பிடித்துக் கொண்ட தோனி ரசிகர்கள், தோனி ஓய்வு பெறப் போகிறாரா? என கேள்வி எழுப்பியே தோனி ஓய்வு பெறப் போகிறார் என்ற வதந்தியை உருவாக்கி, பரப்பினார்கள்.

அந்த பதிவு

அந்த பதிவு

கோலி கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் தோனி என்னை அதிக ரன்கள் ஓட வைத்தார். அதை என்னால் மறக்கவே முடியாது என சம்பந்தமே இல்லாமல் திடீர் என தோனி பற்றி பதிவிட்டது தான் இந்த வதந்தி பரவ முக்கிய காரணம்.

கண்ணீரால் நனைத்தனர்

கண்ணீரால் நனைத்தனர்

தோனி ரசிகர்கள் இணையத்தையே கண்ணீரால் நனைத்து வந்தனர். பலரும் தோனியை மறக்க முடியுமா? என சோக கீதம் பாட, சிலர் தோனி ஓய்வு பெறக் கூடாது, இந்த செய்திகள் உண்மையாக இருக்கக் கூடாது என கதறி வந்தனர்.

காத்திருப்போம்

காத்திருப்போம்

ஏழு மணிக்கு தோனி பத்திரிக்கையாளர்களை சந்திக்கப் போகிறார். அதுவரை காத்திருப்போம் என ரசிகர்கள் தயார் ஆனார்கள். ஆனால், இந்த தகவல் பத்திரிக்கையாளர்களுக்கே புதிய செய்தியாக இருந்தது. காரணம் தோனி பேட்டி அளிக்கப் போவதாக எந்த தகவலும் இல்லை.

மூன்றே வார்த்தை

இந்த நிலையில் தான் மாலை ஆறு மணிக்கு தோனியின் மனைவி சாக்ஷி ஒரு ட்விட்டர் பதிவை பகிர்ந்தார். அதில் மூன்றே வார்த்தைகளில், "இதை வதந்தி என்பார்கள்" என கூறி இருந்தார்.

மாலை வரை சொல்லவில்லை

மாலை வரை சொல்லவில்லை

தோனியின் மனைவியே சொல்லி விட்டார் என தோனி ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், காலை முதல் இணையத்தில் தோனி ரசிகர்கள் கதறி வந்த நிலையில், மாலை ஆறு மணிக்கு தான் தோனி ஓய்வு செய்தி வதந்தி என கூறினார் சாக்ஷி.

ரசிகர்கள் நிம்மதி

ரசிகர்கள் நிம்மதி

எது எப்படியோ, தோனி ஓய்வு பெறப் போவதில்லை என்பதை அறிந்த ரசிகர்கள் நிம்மதி அடைந்து இருக்கின்றனர். எனினும், தோனி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, September 13, 2019, 11:49 [IST]
Other articles published on Sep 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+