Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திருமண நாள் கொண்டாட்டம்.. தோனி கொடுத்த அட்டகாசமான பரிசு.. வாயடைத்துப்போன சாக்‌ஷி - வைரல் புகைப்படம்!

ராஞ்சி: இந்திய முன்னாள் வீரர் தோனி, தனது திருமண நாளன்று மனைவிக்கு அளித்துள்ள பரிசு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான கேப்டனாக வலம் வந்தவர் தோனி. இன்றும் கேப்டன் என்றால் பலரும் தோனியை தான் முதலில் நினைப்பார்கள்.

இவர் நல்ல கிரிக்கெட் வீரர் மட்டுமல்லாது நல்ல குடும்பத்தலைவராக இருப்பதால் இவருக்கு பெரும்பாலான பெண் ரசிகைகள் உள்ளனர்.

திருமண நாள் கொண்டாட்டம்

திருமண நாள் கொண்டாட்டம்

ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான முன்னாள் வீரர் தோனி - சாக்‌ஷி ஆகியோர் இன்று தங்களது 11வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். கிரிக்கெட்டில் பிசியாக வலம் வந்த தோனி, தனது காதலி சாக்‌ஷி குறித்து வெளி உலகிற்கு தெரியப்படுத்தாமலேயே இருந்தார். பின்னர் கடந்த ஜூலை 4ம் தேதி 2004ம் ஆண்டு திடீரென சாக்‌ஷியை டேஹ்ராடூனில் திருமணம் செய்துகொண்டார். இது அவர்களின் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்நிலையில் அவர்கள் இன்று தங்களது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

தோனியின் பரிசு

தோனியின் பரிசு

இவர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருமண நாளன்று மனைவி சாக்‌ஷிக்கு மிகவும் அழகான விண்டேஜ் கார் ஒன்றை பரிசளித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் தோனி. இதுகுறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர், திருமண நாள் பரிசுக்கு நன்றி எனக்கூறியுள்ளார்.

தோனியின் காதல் கதை

தோனியின் காதல் கதை

கொல்கத்தா தாஜ் பெங்கால் ஹோட்டலில் தான் தோனி - சாக்‌ஷியின் முதல் சந்திப்பு நடைபெற்றது. பாகிஸ்தான் போட்டிக்காக இந்திய அணி அந்த ஹோட்டலில் தங்கி இருந்தனர். தோனியின் நெருங்கிய நண்பரும், அவரின் மேளாலருமான யுதாஜித் தத்தா என்பவர் சாக்ஷியின் தோழியும் ஆவர். எனவே

தோனியை பார்க்க தத்தா செல்லும் போது அந்த ஹோட்டலில் பயிற்சி பெற்று வந்த சாக்ஷியும் அவருடன் சென்றார்.

அழகிய குடும்பம்

அழகிய குடும்பம்

பின்னர் தத்தாவிடம் சாக்ஷியின் மொபைல் நம்பரை வாங்கி அவருக்கு மெசேஜ் செய்துள்ளார் தோனி. அதன்பின் இருவரும் நண்பர்களாக பழகி பின்னர் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தற்போது 2 வயதில் ஷிவா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளார்.

Story first published: Sunday, July 4, 2021, 19:10 [IST]
Other articles published on Jul 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+