For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கிருச்சு.. சர்ச்சை ட்வீட்.. ரசிகர்களை திட்டிய தோனி மனைவி!

ராஞ்சி : கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி தோனி ஓய்வு பெற்று விட்டதாக வதந்தி கிளப்பிய ரசிகர்களை விளாசி உள்ளார்.

Recommended Video

Sakshi Dhoni reacts to #DhoniRetires tweet

அவர் அது குறித்து ட்விட்டரில் ஒரு சர்ச்சை பதிவு போட்டு பின்னர் அதை அழித்து விட்டார்.

அவர் லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கி விட்டது எனக் குறிப்பிட்டு கடுமையாக கருத்து கூறி இருந்தது அதிர்ச்சியாக இருந்தது.

202௦ ஐபிஎல்

202௦ ஐபிஎல்

202௦ ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்க இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக அந்த தொடர் நடைபெறவில்லை. சுமார் 9 மாத காலம் கழித்து தோனி அந்த தொடரில் பங்கேற்க இருந்தார். ஆனால், ஐபிஎல் தொடர் தள்ளி வைப்பால் அவரால் பங்கேற்க முடியவில்லை.

நிம்மதியாக தோனி

நிம்மதியாக தோனி

தோனி இந்த லாக்டவுன் காலத்தில் நிம்மதியாக தன் ராஞ்சி பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். ஆனாலும், அவரை அவரது ரசிகர்கள் எப்போதும் மறக்கவில்லை. ஒரு சின்ன வீடியோ, புகைப்படம் அவரைப் பற்றி வந்தாலும் கூட உடனே டிரென்டிங் ஆக்கி விடுகிறார்கள்.

தோனி வெள்ளை தாடி

தோனி வெள்ளை தாடி

தோனி சமீபத்தில் வெள்ளை தாடியுடன் காட்சி அளித்தார். அதில் மிகவும் வயதான தோற்றத்தில் அவர் இருந்தார். அதுவும் கூட வைரல் ஆனது. சில தோனி ரசிகர்கள் பின்னர் அவரை ஷேவ் செய்து கொண்டு இளமையாக இருக்குமாறு கோரிக்கை வைத்தது தனிக் கதை.

ட்விட்டரில் டிரென்டிங்

ட்விட்டரில் டிரென்டிங்

இந்த நிலையில், வேறு சில ரசிகர்கள் தோனியை குறி வைத்து வேண்டும் என்றே தோனி ஓய்வு பெற்று விட்டார் என்பதை குறிக்கும் வகையில் #Dhoniretires என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரென்டிங் ஆக்கினர். அது பரபரப்பை கிளப்பியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் செய்த வேலை

சென்னை சூப்பர் கிங்ஸ் செய்த வேலை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கிண்டல் செய்து ஒரு பதிவை போட்டு இருந்தது. அதைக் கண்டு கோபம் கொண்ட விராட் கோலி ரசிகர்கள் தான் இந்த தோனி ஓய்வு டிரென்டிங்கை துவக்கி இருப்பார்கள் என கூறப்படுகிறது.

கடும் வார்த்தைகளில் திட்டு

கடும் வார்த்தைகளில் திட்டு

இந்த நிலையில், தோனியின் மனைவி சாக்ஷி கடும் வார்த்தைகளில் தோனி ஓய்வு பற்றி ட்விட்டரில் டிரென்டிங் செய்தவர்களை குறிப்பிட்டு ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார். அதில் அவர்களை பைத்தியங்கள் என மறைமுகமாக சாடி இருந்தார்.

சாக்ஷி தோனி பதிவு

சாக்ஷி தோனி பதிவு

சாக்ஷி தோனி தன் பதிவில் - "இது எல்லாமே வதந்திகள். லாக்டவுன் நிறைய பேரை பைத்தியம் ஆக்கி வைத்துள்ளது என புரிகிறது. தோனி ஓய்வு.. போய் வாழ்க்கையை பெற்றுக் கொள்ளுங்கள்" என டிரென்டிங் செய்தவர்களை பற்றி குறிப்பிட்டு இருந்தார்.

அழித்தார்

அழித்தார்

தேவையில்லாமல் தோனி ஓய்வை பற்றி கிளப்பி விட்ட ரசிகர்களை தோனி மனைவி தாக்கிப் பேசியதால் பரபரப்பு எழுந்தது. பின்னர் அந்த சர்ச்சை ட்வீட்டை அழித்து விட்டார் சாக்ஷி தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தோனி ஓய்வு பற்றிய பதிவுகள் வதந்தி என கூறி வந்தது.

தோனி சோர்ந்து போக மாட்டார்

தோனி சோர்ந்து போக மாட்டார்

சில தோனி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டி, தோனி சோர்ந்து போக மாட்டார் எனக் குறிப்பிட்டு #DhoniNeverTires என பதிவிட்டு வந்தனர். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ட்விட்டர் சிக்கி ரணகளமாக இருந்தது. கிரிக்கெட் ரசிகர்களை வைத்தும் ரசிகர்கள் மோதிக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.

Story first published: Thursday, May 28, 2020, 14:16 [IST]
Other articles published on May 28, 2020
English summary
Sakshi Dhoni says Lockdown has made people mentally unstable after some fans spread Dhoni retirement rumours in Twitter.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+