குழந்தை பிறப்பின்போது அவரை என்கூட இருக்க வற்புறுத்தவில்லை.. இது ஒண்ணும் தியாகம் இல்ல!
ராஞ்சி : நேற்றைய தினம் தன்னுடைய 32வது பிறந்தநாளை எம்எஸ் தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனி கொண்டாடினார்.
இதையொட்டி சிஎஸ்கே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சாக்ஷியின் பேட்டியை வெளியிட்டுள்ளது.
பேட்டியின்போது தோனியை அதிகமாக கடுப்பேற்றுவதும், ஊக்குவிப்பதும் தான்தான் என்று சாக்ஷி குறிப்பிட்டுள்ளார்.

வைரலான புகைப்படம்
முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனி, தன்னுடைய 32வது பிறந்தநாளை நேற்றைய தினம் கொண்டாடினார். இதையொட்டி அவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே
இந்நிலையில் சாக்ஷியின் பிறந்ததினத்தையொட்டி சிஎஸ்கே அணி தனது டிவிட்டர் பக்கத்தில் அவரது பேட்டியை வெளியிட்டது. அதில் அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தோனியை எளிதில் கடுப்பேற்றுவதும் ஊக்குவிப்பதும் தான்தான் என்று அவர் கூறியுள்ளார். அந்த அளவில் தாங்கள் இருவரும் நட்புடன் உள்ளதாகவும் கூறினார்.

உலக கோப்பையில் தோனி பிசி
ஜிவா பிறந்தபோது தோனி உலக கோப்பை தொடரில் பிசியாக விளையாடிக் கொண்டிருந்தததாகவும் தொடர் முடிந்தபின்பே அவர் வந்து குழந்தையை பார்த்ததாகவும் அவர் கூறினார். இடையில் வந்து குழந்தையை பார்க்க தான் வலியுறுத்தவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

தோனியை விரும்பும் சாக்ஷி
இதற்கு காரணத்தையும் அவர் கூறியுள்ளார். தோனி கிரிக்கெட்டை அதிகமாக விரும்புவதாகவும் தான் அவரை விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் அனைவரும் தன்னுடைய கணவர் வரவில்லையா என்று கேட்டதாகவும் ஆனாலும் தான் அந்த சூழலை சமாளித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
விரும்பும் நபருக்கான கடமை
இது தியாகம் இல்லை என்றும் ஒருவரை நாம் விரும்பும்போது இதை தியாகம் என்று கூறுவதில் எந்த நியாயமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அவரை விரும்புவதால் இதை நாம் இயல்பாகவே செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். மேலும் வீட்டில் இருக்கும்போது தாங்கள் கிரிக்கெட் குறித்து பேசுவதில்லை என்றும் சாக்ஷி மேலும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications