IPL VS BBL.. மற்ற நாடுகள் நடத்தும் டி20 லீக் போட்டி..!! இவ்வளவு தான் சம்பளமா?? அதிகரிக்கும் மவுசு
பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் வாழ்க்கை தருவது இல்லை. வெளிநாட்டு வரர்களும் ஐபிஎல் நம்பியே உள்ளனர்.
Recommended Video
மேற்கிந்திய திவுகளில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் ஐபிஎல் தொடரில் விளையாடினாலே, அவர்களது வாழ்க்கை மாறிவிடும்.
இதனால் தான் ஏதாவது ஒரு அணி, நம்மை எடுத்து விட மாட்டார்களா என்று கிரிக்கெட் வீரர்கள் எங்கி உள்ளனர்.

வெளிநாட்டில் கிரிக்கெட்
கிரிக்கெட் இந்தியாவில் மட்டும் தான் மிகவும் பிரபலம். கிரிக்கெட் மூலம் இங்கு பல கோடிகள் கொட்டும். ஆனால் வெளிநாட்டில் மற்ற விளையாட்டு போல் கிரிக்கெட் ஒரு சாதாரண விளையாட்டு தான். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விளையாடினால், உங்கள் வாழ்க்கையை நீங்கள் தாரளமாக ஓட்ட முடியும்.

அதிகமான ஊதியம்
இதுவே மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே போன்ற நாட்டில் கிரிக்கெட் விளையாடினால் உங்களுக்கு ஊதியமே கிடைக்காது. ஆனால், ஐபிஎல் தொடரில் கிடைக்கும் ஒரு ஓப்பந்தம் மூலம் கிடைக்கும் ஊதியம், அவர்கள் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடி சம்பாதித்த பணத்தை விட அதிகமாக இருக்கும்.

ஐபிஎல் மவுசு
இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களை மில்லினியர் என்று அவர்கள் நாட்டு ஊடகங்கள் கூறுகின்றனர். ஐபிஎல் விளையாடினால் அவர்கள் நினைத்த வாழ்க்கையை வாழ முடியும்.இதனால் தான் சிலர் சர்வதேச போட்டிகளை விட்டு, ஐபிஎல் தொடருக்கு வருகிறார்கள்.

ஐபிஎல் ஆர்வம்
தற்போது ஐபிஎல் வெற்றிக்கு பிறகு ஒவ்வொரு நாடும் இதே போன்று கிரிக்கெட் தொடரை தொடங்கிவிட்டது.இதனால் டுபிளஸி போன்ற வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு பதில், இது போன்ற டி20 போட்டிகளில் விளையாடி, அதிக வருமானம் ஈட்டுகின்றனர். தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாடிய அலெக்ஸ் ஹெல்ஸ், ஐபிஎல் ஏலத்தில் விலை போனதும், அதிலிருந்து விலகி வந்துவிட்டார்.

இவ்வளவு தான் ஊதியம்?
எனினும் ஐபிஎல் போட்டியில் கிடைக்கும் வருமானமும், மற்ற லீக் போட்டிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் ஓப்பிட்டால் கொசுவிற்கும், யானைக்கும் உள்ள வித்தியாசம் தான். ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஊதியம் 17 கோடி ரூபாய், ஆனால் பிக் பேஷ் லீக் தொடரில் அதிகபட்ச ஊதியமே 1.9 கோடி ரூபாய் தான். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அதிகபட்ச ஊதியம் 1.27 கோடி தான். இதுகே கேரிபியன் பிரிமியர் லீக் தொடரில் 85 லட்சம் ரூபாய். இதனால் தான் வெளிநாட்டு வீரர்களிடையே ஐபிஎல் மவுசு இன்னும் குறையவில்லை.


Click it and Unblock the Notifications