For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.பி.எல் பெருவிழா: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 லீக் போட்டிகள்- நாளை டிக்கெட் விற்பனை தொடக்கம்!

By Mathi

சென்னை: 8வது ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக டிக்கெட்டுகள் விற்பனை நாளை தொடங்குகிறது.

8-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 8-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடக்கிறது. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், மொகாலி, அகமதாபாத், ஐதராபாத், புனே, ராய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இப் போட்டி நடைபெறுகிறது.

Sale of IPL tickets begins tomorrow

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 லீக் போட்டிகள் நடைபெறுகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-ந் தேதியன்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதும் ஆட்டம் இரவு 8 மணிக்கும், 11-ந்தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதும் ஆட்டம் மாலை 4 மணிக்கும், 25-ந் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடனும் மோதும் ஆட்டம் இரவு 8 மணிக்கும் 28-ந்தேதி கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன் மோதும் ஆட்டம் இரவு 8 மணிக்கும்,

மே 4-ந்தேதி மாலை 4 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனும் மே 8-ந்தேதி இரவு 8 மணிக்கு மும்பை இந்தியன்ஸுடனும் , மே 10-ந்தேதி இரவு 8 மணிக்கு ராஜஸ்தானுடனும் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகின்றது

சென்னையில் நடை பெறும் முதல் 2 போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் ஆடுவதற்காக தடை தொடர்ந்து நீடிக்கிறது.

Story first published: Sunday, April 5, 2015, 16:51 [IST]
Other articles published on Apr 5, 2015
English summary
The sale of tickets for the Eigth edition of the IPL will start tomorrow at Chennai.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+