“ஐயோ இதை கவனிக்கவே இல்லையே”.. இந்திய அணியின் முக்கிய குறைபாடு.. பாக். சீனியர் தந்த அட்வைஸ்!
மொஹாலி: இந்திய அணியில் உள்ள முக்கிய குறைகளை பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நாளை நாக்பூரில் நடைபெறவுள்ளது.
முதல் டி20 போட்டியில் மோசமான தோல்வியை பெற்றதால், இந்திய அணியின் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன.

2வது டி20 போட்டி
கடந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் மோசமான ஃபீல்டிங் தான். கே.எல்.ராகுல், அக்ஷர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல் என மூன்று பேருமே சுலபமான கேட்ச்-களை கூட தவறவிட்டனர். மறுவாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் வெற்றியை பெற்றுவிட்டனர்.

சல்மான் பட் அறிவுரை
இந்நிலையில் இந்திய அணியில் ஃபிட்னஸ் என்பதே இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், வேறு யாரேனும் இதை பற்றி பேசினார்களா என்பது தெரியவில்லை? ஆனால் என்னை பொறுத்தவரையில் கோலி, ஹர்திக்கை தவிர இந்திய அணியில் யாருமே ஃபிட்டாக இல்லை. சரியான உடல் தகுதி இல்லாதது பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் எதிரொலிக்கிறது.

யாரெல்லாம் மோசம்?
தற்போதைய அணியில் ரோகித் சர்மா,கே.எல்.ராகுல் ஆகியோர் சரியான உடல்நிலை இல்லாமல் தவிக்கின்றனர். இதே போல தான் ரிஷப் பண்ட்-ம் ஓவர் எடையுடன் இருக்கிறார். இவர்கள் மட்டும் முழு ஃபிட்னஸுடன் இருந்தால் மிகவும் ஆபத்தான வீரர்களாக உருவெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அதிக வருமானம்
உலகில் அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட்டர்கள் இந்தியர்கள் தான். அவர்கள் நிறைய போட்டிகளில் விளையாடுகிறார்கள். ஆனாலும் அவர்கள் உடல்நிலையை சரிபார்த்துக்கொள்ளவில்லை. ஆசிய நாடுகளிலேயே மிக மோசமான ஃபிட்னஸ் இந்திய அணியில் தான் உள்ளது. எனவே பிசிசிஐ இதில் தலையிட்டு சரிசெய்ய வேண்டியது அவசியம்.


Click it and Unblock the Notifications