‘மூளையில் பிரச்னை இருக்கலாம்’ கோலி குறித்த பேச்சால் வந்த பிரச்னை.. முன்னாள் வீரர்களுக்கு தீராத சண்டை
மும்பை: விராட் கோலி குறித்த சர்ச்சை கருத்தால் ஆஸ்திரேலியாவின் வாகன் மற்றும் பாகிஸ்தானின் சல்மான் பட்-ம் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்,
இங்கிலாந்தில் வரும் ஜூன்18ம் தேதி இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்கிறது.
இந்த தொடரில் விராட் கோலி பெரியாளா? அல்லது வில்லியம்சன் பெரியாளா? என்ற விவாதம் தொடங்கியுள்ளது. இதற்காக இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்த கருத்துதான் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரச்னை என்ன?
நியூசிலாந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த வாகன், விராட் கோலிக்கு சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோவர்கள் மற்றும் அதிக லைக்குகள் கிடைப்பதால் தான் உலகின் தலைசிறந்த வீரராக பார்க்கப்படுகிறார். கேன் வில்லியம்சனுக்கு அவ்வளவு ரசிகர்கள் இல்லை என்றாலும் விராட் கோலிக்கு சமமானவர் தான் எனக்கூறியிருந்தார்.

கோலிக்கு ஆதரவு
இதற்கு பதிலளித்திருந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட், விராட் கோலி திறமையால் தான் சிறந்த வீரராக உள்ளார். சர்வதேச போட்டிகளில் அவர் 70 சதங்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் ஓப்பனராக களமிறங்கிய வாகன் ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் கூட அடித்ததில்லை. அவர் கோலியை பற்றி பேசுவது தேவையற்றது. நேரம் போகவில்லை என்றால் இப்படி எதையாவது கிளப்பி விடுகிறார்கள் எனக்கூறியிருந்தார்.

வாகன் பதிலடி
இதனை அறிந்து பொங்கி எழுந்த வாகன், சல்மான் என்னை பற்றி பேசியதாக அறிந்தேன். கருத்து தெரிவிப்பதற்கு அவரின் உரிமை. ஆனால் அதே நேரத்தில் அவர் கடந்த 2010ம் ஆண்டு அவர் மேட்ச் ஃபிக்ஸிங் முறைகேடு செய்து சிக்கியதை பற்றி நியாபகம் வைத்திருப்பார் என நினைக்கிறேன் எனக்கூறி பதிலடி கொடுத்தார்.

மூளையில் சிக்கல்
இந்நிலையில் இந்த பிரச்னை நீண்டுக்கொண்டே இருக்கிறது. வாகனின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ள மைக்கேல் வாகன், வாகன் தேர்ந்தெடுத்த விஷயம் தவறானது. அதை தான் நான் சுட்டி காட்டினேன். சிலருக்கு மூளையிலும் சிக்கல் இருக்கலாம். அதனால் அவர்கள் கடந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். கோலி, வில்லியம்சன் குறித்து குறைந்தபட்சம் புள்ளிவிவரங்களை வைத்து வாகன் ஒப்பிட்டு பேசி இருக்கலாம். வெறுமனே சமூக வலைதள கணக்குகளை வைத்து பேசிவிட்டார். இப்படி பேசுவது தரம் தாழ்ந்த ஒன்று எனக்கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications