எனக்கு பிடிச்ச கிரிக்கெட் வீரர் தோனி தாங்க.. மனம் திறந்த பாலிவுட் சூப்பர்ஸ்டார்!
மும்பை : தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் என்று பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
சல்மான் கான் நடிப்பு மற்றும் தயாரிப்பில் பிரவுதேவா இயக்கத்தில் வரும் 20ம் தேதி வெளியாக உள்ள தபாங் 3 படத்தின் பிரமோஷன் பணிகளில் சல்மான் கான் ஈடுபட்டுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான், தபாங் வீரர் தோனி தான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கிரிக்கெட்டில் கேதார் ஜாதவ்வை தனக்கு மிகவும் நெருக்கமாக தெரியும் என்றும் கூறியுள்ளார்.

20ம் தேதி தபாங் 3 வெளியீடு
பாலிவுட் சூப்பர்ஸ்டாரும் இளம்பெண்களின் கனவு நாயகனுமான சல்மான் கானின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் தபாங் படத்தின் மூன்றாவது பாகம் வரும் 20ம் தேதி உலகெங்கிலும் வெளியாக உள்ளது.

பிரம்மாண்டமான வெளியீடு
தமிழ்நாடு முழுவதும் 300 திரையரங்குகளில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் தற்போது சல்மான் கான் ஈடுபட்டுள்ளார்.

மனம் திறந்த சல்மான்கான்
தபாங் 3 படத்திற்கான பிரமோஷன் பணிகளில் ஈடுபட்ட சல்மான்கான் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் தோனி தான் என்று மனம் திறந்துள்ளார். அவர் ஒரு தபாங் வீரர் என்றும் சல்மான்கான் குறிப்பிட்டுள்ளார்.

மகிழ்ச்சி தெரிவித்த சல்மான்
இதுதவிர கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ்வையும் தனிப்பட்ட முறையில் தனக்கு தெரியும் என்று சல்மான்கான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications