Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்ப சொல்லுங்க...!! ரூ.7.2 கோடி உங்களுக்கு லாபம் தானே... !!

சண்டிகர்: தன்னை ரூ.7.2 கோடிக்கு வாங்கியது சரிதான் என்பதை டெல்லிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சாம் கர்ரன் நிரூபித்துவிட்டார்.

இருப்பது 23 பந்துகள்... எடுக்க வேண்டிய ரன்களோ 23... கையில் இருப்பது 7 விக்கெட்டுகள். டெல்லிக்கு தான் நிச்சய வெற்றி என்பதை ஒட்டுமொத்தமாக மாற்றி ஐபிஎல் கிரிக்கெட்டை பற்றி நாள் முழுவதும் பேச வைத்துவிட்டார்கள் பஞ்சாப் அணியினர்.

வெற்றி தான் என்ற நிலைமையை நிமிட நேரத்தில் மாற்றினால் எப்படி இருக்கும். அப்படிப் பட்ட சூழல் தான் சண்டிகரில் பஞ்சாப், டெல்லி அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் காண முடிந்தது.

சீட்டுக்கட்டு அவுட்டுகள்

சீட்டுக்கட்டு அவுட்டுகள்

சீட்டுக்கட்டுகளை போல... கடைசி 8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து டெல்லி எதிர்பாராத தோல்வியை சந்தித்து இருக்கிறது. பஞ்சாப் பந்துவீச்சாளர் சாம் கர்ரன் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

2 பேர் காரணம்

2 பேர் காரணம்

முகமது சமி எடுத்தது 2 முக்கிய விக்கெட்டுகள். அஸ்வின் ஒரு ரன் அவுட் செய்ய டெல்லி அணி தோல்வி அடைந்தது. கிட்டத்தட்ட 2 பந்துவீச்சாளர்களால் டெல்லி ஒட்டுமொத்தமாக சாய்ந்தே விட்டது.

சாம் கர்ரனுக்கு 4

சாம் கர்ரனுக்கு 4

சாம்கர்ரன், முகமது சமி ஆகியோரின் அபாரமான பந்துவீச்சை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதிலும் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் 2.2 ஓவர்கள் வீசி 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார்.

பேட்டிங்கில் ஜொலிப்பு

பேட்டிங்கில் ஜொலிப்பு

அவர் வீசிய கடைசி 8 பந்துகள் தான் முக்கிய இலக்கு. அதில் தான் அவர் 4 விக்கெட்டுகளையும் அள்ளி எடுத்தார். பேட்டிங்கில் 10 பந்துகளுக்கு 20 ரன்கள் அவர் எடுத்திருந்தார்.

ரூ.7.2 கோடிக்கு ஏலம்

ரூ.7.2 கோடிக்கு ஏலம்

ஐபிஎல் ஏலத்தில் தம்மை ரூ.7.2 கோடிக்கு வாங்கியது சரிதான் என்பதை சாம் கர்ரன் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் உணர்த்திவிட்டார். ஆட்ட நாயகன் விருதும் அவருக்கு தான் வழங்கப்பட்டது.

முன்னேற்றம், மகிழ்ச்சி

முன்னேற்றம், மகிழ்ச்சி

இது குறித்து அவர் கூறியதாவது:இது மிகச் சிறந்த வெற்றி. அதிர்ஷ்டவசமாக நாங்கள் 166 ரன்களை குவித்தோம், ஆறு பந்துவீச்சாளர்கள் சிறப்பாக இருந்தனர். சில மாதங்களாக என் பேட்டிங்கில் நான் முன்னேற்றமடைந்தேன்.

பள்ளி நாட்கள்

பள்ளி நாட்கள்

பேட்டிங், பந்துவீச்சு, மற்றும் ஃபீல்டிங் ஆகியவற்றில் கடினமாக உழைக்க விரும்புகிறேன். நான் பள்ளி கிரிக்கெட்டில் துவக்க வீரராக களம் இறங்கி இருக்கிறேன் என்றார்.

சாய்த்த சமி

சாய்த்த சமி

முகமது சமியின் பந்துவீச்சும் நன்றாகவே இருந்தது. ரிஷப் பண்ட், விஹாரி ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை தகர்த்தது ஆட்டத்தின் திருப்புமுனை. டெல்லி தோல்விக்கு மோரிஸ், விஹாரி, படேல் என்ற 3 பேர் தான் காரணம் என்று சொல்லலாம். ஆக... 144 ரன்களுக்கு 4வது விக்கெட்டை இழந்த டெல்லி, அடுத்த 8 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததை ரசிகர்கள் மறக்க வெகுகாலம் ஆகும்.

Story first published: Tuesday, April 2, 2019, 13:03 [IST]
Other articles published on Apr 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+