4வது டெஸ்டிலும் இல்லை... முக்கிய வீரரை இழக்கும் இங்கிலாந்து... நெருக்கடியில் ஜோ ரூட்
அகமதாபாத்: இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இரு அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் பிப்ரவரி 24ம் தேதி நடைபெறவிருக்கிறது.

சாம் கரண்
கொரோனா பபுள் முறை காரணமாக இந்திய சுற்றுப்பயணத்தில் சாம் கரண் வருவது தாமதமானது. இதனால் 4வது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இந்தியா வந்து அவர் தனிமைப்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சாம் கரண் 4வது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்
இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமானம் இல்லை. இங்கிலாந்து அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இந்தியா வந்தனர். இதனால் சாம் கரண் ஒருவருக்காக மட்டும் தனி விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு பின்னடைவு
இந்திய சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக இலங்கையுடன் இங்கிலாந்து அணி மோதியது. இதில் ஆல் ரவுண்ட சாம் கரண் சிறப்பாக செயல்பட்டார். அவருடன் விளையாடிய பேர்ஸ்ட்டோ, மார்க் வுட், ஆகியோர் 3வது டெஸ்டிலேயே பங்கேற்கும் நிலையில் சாம் கரண் பங்கேற்கவில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு
சாம் கரண் ஐபிஎல் தொடரில் ஏப்ரல் மாதம் சிஎஸ்கேவிற்காக கலந்து கொள்ள விரும்புகிறார். இதனால் டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறினாலும் டி20 போட்டிகளில் சாம் கரண் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நடைபெறும் ஒரு நாள் போட்டியில் அவர் ஓய்வெடுக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications