Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி ஒரு ஜீனியஸ்... அதுல மாற்றுக்கருத்தே இல்ல... சாம் குர்ரான் பரவசம்

அபுதாபி : சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள சாம் குர்ரான் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி ஒரு ஜீனியஸ் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேலும் சிஎஸ்கே டீமில் தான் இடம்பெற்றுள்ளது மிகவும் உற்சாகமாக உள்ளதாகவும் குர்ரான் தெரிவித்துள்ளார்.

நேற்றைய சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டியில் இங்கிலாந்து வீரர் சாம் குர்ரான் 6 பந்துகளில் 18 ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு தானும் ஒரு காரணமாக அமைந்தார்.

Sam Curran says CSK Captain MS Dhoni is a genius

ஐபிஎல் போட்டிகள் நேற்று சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையில் நடைபெற்ற நிலையில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. சிஎஸ்கே அணியின் கேப்டன் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் கேப்டன் தோனி மிகப்பெரிய ஜீனியஸ் என்று அணியின் சாம் குர்ரான் பரவசம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் 6 பந்துகளில் 18 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் சாம் குர்ரான். சிஎஸ்கே அணியில் தான் இடம்பெற்றுள்ளது மிகவும் உற்சாகத்தை அளித்துள்ளதாக குர்ரான் கூறியுள்ளார். தோனி திட்டமிட்டு அணியை வெற்றி பெற செய்துள்ளதாக குர்ரான் கூறியுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்புதான் வந்ததால் எதைப்பற்றியும் சிந்திக்க முடியவில்லை என்றாலும் உற்சாகமாகவே உள்ளதாகவும் கூறியுள்ளார் குர்ரான். 6வது இடத்தில் தான் இறக்கப்பட்டது மிகவும் சர்ப்ரைசாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Story first published: Sunday, September 20, 2020, 13:14 [IST]
Other articles published on Sep 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+