Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 வரலாற்றிலேயே மாபெரும் சாதனை.. யுவராஜ் சிங் 36 ரன் ரெக்கார்டை உடைத்த சமோவா வீரர் டேரியஸ் விசர்

சமோவா: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாபெரும் வரலாற்று சாதனையை செய்து இருக்கிறார் சமோவா நாட்டின் வீரர் டேரியஸ் விசர். அவர் ஒரே ஓவரில் 39 ரன்கள் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் செய்த சாதனையை முறியடித்தார். இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ஒரு ஓவரில் 36 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த சாதனையை முறியடித்ததோடு, ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்தார் டேரியஸ்.

வனாட்டு அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஈஸ்ட் ஏசியா - பசிபிக் தகுதிச் சுற்றில் சமோவா அணி ஆடியது. முதலில் பேட்டிங் செய்த சமோவா அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டேரியஸ் விசர் மட்டுமே 132 ரன்கள் சேர்த்தார். எட்டு வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து இருந்தனர். கேப்டன் ஜஸ்மத் 16 ரன்கள் எடுத்ததே இரண்டாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆகும்.

Yuvraj Singh t20 cricket 20

தனது அணியை தனியாக காப்பாற்றிய டேரியஸ் விசர் அதிரடியாக ஆடி 62 பந்துகளில் 132 ரன்கள் சேர்த்தார். 5 ஃபோர் மற்றும் 14 சிக்ஸ் அடித்து இருந்தார். இந்தப் போட்டியில் வனாட்டு வீரர் நாலின் நிபிகோ வீசிய 15 வது ஓவரில் டேரியஸ் விசர் ஆறு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் மூன்று நோ பால்களும் வீசப்பட்டன. அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 39 ரன்கள் கிடைத்தது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன் எடுத்த சாதனை படைக்கப்பட்டது.

இதற்கு முன் ஒரே ஓவரில் 36 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. முதன் முதலாக 2007 டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் அந்த சாதனையை செய்தார். அதன் பின்பு, கீரான் பொல்லார்டு (2021), நிக்கோலஸ் பூரன் (2024), திபேந்திரா சிங் ஏரி (2024) ரோகித் சர்மா / ரிங்கு சிங் இணைந்து (2024) என ஐந்து முறை அந்த சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.

Yuvraj Singh t20 cricket 20

இந்தப் போட்டியில் டேரியஸ் விசர் 14 சிக்ஸ் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் எண்ணிக்கை இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் அடுத்து ஆடிய வனாட்டு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. சமோவா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, August 20, 2024, 8:49 [IST]
Other articles published on Aug 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+