Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீருபா.. பாலா பாஜி.. ரொம்ப தேங்ஸ்பா.. உருகி நெகிழும் சந்தீப்!

துபாய்: நான் இன்று நல்ல கிரிக்கெட் வீரராக உருவெடுக்க வீரேந்திர ஷேவாக்தான் காரணம். அவர்தான் என்னை பட்டை தீட்டியவர் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அபாரமான பந்து வீச்சாளராக ஜொலித்து வரும் சந்தீப் சர்மா கூறியுள்ளார்.

எதிரணிகளின் கண்ணில் பேட்டால் மேக்வெல் விரலை விட்டு ஆட்டுகிறார் என்றால் சந்தீப் சர்மா, தந்து வீச்சால் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

அதிலும் நேற்று பெங்களூருக்கு எதிரான போட்டியின்போது கெய்ல், கோஹ்லி என முன்னண வீரர்களை பெண்டெடுத்து விட்டார் சந்தீப் சர்மா. தான் இப்படி சிறப்பாக விளையாட ஷேவாக்தான் காரணம் என்றும் அவர் நன்றியுடன் சொல்கிறார்.

குருவே நமஹ...

குருவே நமஹ...

இதுகுறித்து சந்தீப் கூறுகையில், வீருபா.. ஒரு அபாரமான வீரர். அருமையான மனிதர். பயிற்சியின்போது நிறைய உதவினார்.

பேட்டைப் போட்டுட்டு வருவார்

பேட்டைப் போட்டுட்டு வருவார்

நான் பயிற்சியின்போது பந்து வீசிக் கொண்டிருப்பேன். அப்போது நான் ஏதாவது தவறு செய்தால் உடனே தனது பேட்டை போட்டு விட்டு என்னிடம் வந்து விடுவார் ஷேவாக்.

இப்படிப் போடக் கூடாதுப்பா

இப்படிப் போடக் கூடாதுப்பா

எனது பந்து வீச்சில் என்ன தவறு என்பதை எனக்கு சரியாக சுட்டிக் காட்டித் திருத்துவார். என்னை முழுமையான வீரராக மாற்றிய பெருமை அவருக்கே உண்டு.

மனிதருள் மாணிக்கம்

மனிதருள் மாணிக்கம்

ஜெம் போன்ற மனிதர் ஷேவாக். அவருடன் இணைந்து விளையாடுவதை பெருமையாக கருதுகிறேன். எனக்கு மிக மிகப் பிடித்த வீரரும் ஷேவாக்தான். இப்போது அவருடன் இணைந்து ஆடுகிறேன். கொடுத்து வைத்தவன் நான்.

பாலா பாஜி...

பாலா பாஜி...

அதேபோல பாலா பாஜியும் (அதாங்க நம்ம ஊரு லட்சுமிபதி பாலாஜி.. அதாவது எல். பாலாஜி) எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறார். என்னைத் தயார்படுத்துவதில் அவரது பங்கும் முக்கியமானதாக உள்ளது. எப்படி டென்ஷன் இல்லாமல் பந்து வீச வேண்டும் என்பதை அவர் அழகாக சொல்லிக் கொடுத்தார்.

கோஹ்லியை சமாளிப்பது கஷ்டமானது

கோஹ்லியை சமாளிப்பது கஷ்டமானது

விராத் கோஹ்லி புதிய பந்தை அழகாக சமாளித்து அதிரடியாக ஆடக் கூடியவர். அதேசமயம், ஆப் டி வில்லியர்ஸ், பழைய பந்தில் பட்டையைக் கிளப்புவார். இவர்களுக்கு பந்து வீசுவதுதான் சற்று கடினமானது என்றார் சந்தீப்.

அடுத்தடுத்து 2 மேன் ஆப் தி மேட்ச்

அடுத்தடுத்து 2 மேன் ஆப் தி மேட்ச்

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியிலும் சந்தீப் 3 விக்கெட்களைச் சாய்த்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். நேற்றைய போட்டியிலும் 3 விக்கெட்களைச் சாய்த்து ஆட்ட நாயகன் ஆனார்.

Story first published: Tuesday, April 29, 2014, 16:26 [IST]
Other articles published on Apr 29, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+