Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்தில் நல்லா காபி குடிக்கிறாங்க... கோஹ்லி, ரவி சாஸ்திரியை விட்டு வாங்கிய சந்திப் பாட்டில்

Recommended Video

கோஹ்லி, ரவி சாஸ்திரியை விட்டு வாங்கிய சந்திப் பாட்டில்- வீடியோ

டெல்லி : டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எந்த போராட்டமும் இன்றி, சொற்ப ரன்கள் மட்டுமே அடித்து சரணாகதி அடைந்தது.

இதைக் கண்டு கோபமடைந்த இந்திய முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் தொடர்ந்து இந்திய அணியின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் தேர்வாளராக இருந்தவருமான சந்திப் பாட்டில் ரவி சாஸ்திரி மற்றும் கோஹ்லியின் தவறான அணுகுமுறை தான் இந்த தோல்விக்கு காரணம் என கூறியுள்ளார்.

sandip patil slams kohli and shastri for their wrong approach


சந்திப் பாட்டிலின் கோபத்திற்குக் காரணம் இங்கிலாந்து தொடருக்கு செல்லும் முன், ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோஹ்லி இணைந்து பேட்டி அளித்த பொது பேசிய பேச்சுக்கள் தான். அப்போதும் இருவரும் மிகவும் கெத்தாக பேசினார்கள். இங்கிலாந்து சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்திய வீரர்களின் தயார்நிலை குறித்த கேள்விகளுக்கு, “இங்கிலாந்துக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொள்ள நிறைய நேரம் இருக்கிறது” என்று கூறினர்.

கோஹ்லி அப்போது பேசும்போது “சாம்பியன்ஸ் ட்ரோபி கூட இங்கிலாந்தில் தான் நடந்தது என்பதை மக்கள் மறந்து விட்டார்கள். அங்கே சென்றதும் என்ன செய்வீர்கள் என கேட்கிறார்கள். நான் அங்கே வீதிகளில் காபி அருந்திக் கொண்டு நடந்து கொண்டு இருப்பேன் என கூறினேன். என் சிந்தனை மிக வித்தியாசமாக இருக்கிறது” என கூறினார்.

இது போல பேசிய இவர்களின் அணுகுமுறை தான், தற்போது தோல்விக்கு காரணம் என சந்திப் பாட்டில் கோபம் கொண்டுள்ளார். “இந்திய அணியின் செயல்திறனை பார்க்கும்போது, வீரர்கள் கேப்டனின் அறிக்கையை முக்கியமாக எடுத்துக் கொண்டு, உண்மையாகவே இங்கிலாந்து சூழ்நிலைகளில் காபியை அருந்தி மகிழ்ந்து வருகிறார்கள் என தெரிகிறது” என கேலியாக கூறியுள்ளார் பாட்டில்.

“இங்கிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்ட இந்திய கேப்டன்கள் அஜீத் வடேகர், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், அசார், சவுரவ் கங்குலி என யாரும் முக்கியமான தொடருக்கு முன் எப்போதும் இப்படி பொறுப்பற்ற முறையில் பேசவில்லை” என காட்டமாக கூறியுள்ளார் சந்திப் பாட்டில்.







Story first published: Wednesday, August 15, 2018, 18:20 [IST]
Other articles published on Aug 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+