For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விஸ்வரூபம் எடுத்தது முரளிதரன் பஞ்சாயத்து.. முரளிக்கு ஆதரவாக களம் குதித்தார் சங்கக்கரா!

கொழும்பு: இலங்கையின் முன்னாள் பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கும், இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முரளிதரனுக்கு ஆதரவாக மற்றொரு ஜாம்பவான் குமார சங்கக்கரா குரல் கொடுத்துள்ளார்.

முரளி இலங்கையின் மண்ணின் மைந்தன் என்றும் அவரது தேசபக்தியை யாருக்கும் அவர் நிரூபிக்க வேண்டியதில்லை என்றும் சங்கக்கரா காட்டமாக கூறியுள்ளார்.

இதையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும், முரளிதரனுக்கும் இடையிலான மோதல் வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து முரளிதரன் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திடீர் மோதல்

திடீர் மோதல்

ஆஸ்திரேலியா அணி தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ளது. அந்த அணியின் பந்து வீச்சுப் பயற்சியாளராக முரளிதரன் நியமிக்கப்பட்டார். இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்தது. இதுகுறித்து அது ஆட்சேபித்தது. இந்த நிலையில் கண்டி மைதானத்தில் வைத்து முரளிதரனுக்கும், இலங்கை தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

கியூரேட்டர் - மேனேஜருடன் மோதல்

கியூரேட்டர் - மேனேஜருடன் மோதல்

பிட்ச் கியூரேட்டர் மற்றும் இலங்கை அணியின் மேலாளருக்கும், முரளிதரனுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதுகுறித்து இலங்கை கிரி்க்கெட் வாரியம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதி புகார் தெரிவித்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலியப் பந்து வீச்சாளர் பொறுப்பிலிருந்து முரளிதரன் விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

களத்தில் குதித்த சங்கக்கரா

இந்த நிலையில் முரளிக்கு ஆதரவாக குமார சங்கக்கரா களத்தில் குதித்துள்ளார். முரளியை தேச துரோகி போல இலங்கை கிரிக்கெட் வாரியம் பார்ப்பது தவறு என்று அவர் சாடியுள்ளார். முரளியை மண்ணின் மைந்தன். அவரை சந்தேகப்படுவது தவறு. அவர் யாருக்கும் தனது தேசபக்தியை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சங்கக்கரா கூறியுள்ளார்.

கூப்பிட்டாதானே

மேலும் அவர் கூறுகையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒருபோதும் முரளியை பயிற்சி அளிக்குமாறு கூப்பிட்டதில்லை. அவரது ஆலோசனையைப் பெற்றதில்லை. தான் பெற்றதை கிரி்க்கெட்டுக்குத் திருப்பித் தர அவருக்கு உரிமை உண்டு. அதைத்தான் அவர் செய்கிறார்.

யார் வேண்டுமானாலும் ஆலோசனை கேட்கலாம்

முரளியிடம் எந்த இலங்கை பந்து வீச்சாளராவது போய் பந்து வீச்சு குறித்து ஆலோசனை கேட்டால் அவர் உடனே அறிவுரை சொல்வார். இலங்கை வீரர்களுக்கு உதவி என்றால் முதல் ஆளாக நிற்பார். அதுவும் இலவசமாக ஆலோசனை தருவார்.

உட்கார்ந்து பேசுங்க

இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு, முரளியுடன் பிரச்சினை என்றால் அவருடன் உட்கார்ந்து பேசி சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சங்கக்கரா.

Story first published: Wednesday, July 27, 2016, 19:45 [IST]
Other articles published on Jul 27, 2016
English summary
Lankan cricket giant Kumara Sangakara has come out in support of Muralitharan, the legendary spinner.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X