Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சங்கக்கராவுக்கு இந்தப் "பரிசு" நிச்சயம் பொருத்தமானதல்ல...!

கொழும்பு: "இலங்கையின் சச்சின் டெண்டுல்கர்" குமார சங்கக்கராவுக்கு அவரது கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தேடிக் கொடுத்து பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளனர் இலங்கை வீரர்கள்.

சங்கக்கராவின் கடைசி டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு வரலாறு காணாத வெற்றியாக அமைந்து விட்டது என்றால், சங்கக்கராவுக்கோ மறக்க முடியாத போட்டியாக மாறி விட்டது.

தனிப்பட்ட முறையில் சங்கக்கராவுக்கும் இது பெருத்த ஏமாற்றத்துடன் கூடிய போட்டிதான். காரணம், இப்போட்டியில் அவர் ஒரு சதம் கூட போட முடியாமல் போனது.

மறக்க முடியாத சங்கக்கரா

மறக்க முடியாத சங்கக்கரா

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு வீரர் என்றால் அது சங்கக்கராதான். அருமையான விக்கெட் கீப்பராக மட்டுமல்லாமல் அசாத்தியமான பேட்ஸ்மேனாகவும் வலம் வந்தவர்.

சச்சின் போல சாதனை

சச்சின் போல சாதனை

எப்படி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சச்சினோ, அதுபோலத்தான் இலங்கை ரசிகர்களால் போற்றப்பட்டவர் சங்கக்கரா. அவரது பேட்டிங் சாதனைகள் இலங்கை கிரி்கெட்டுக்கு பெரும் மறுமலர்ச்சியைத் தேடிக் கொடுத்தவை.

ஜெயவர்த்தனேவுடன் இணைந்து

ஜெயவர்த்தனேவுடன் இணைந்து

இவரும், மஹள ஜெயவர்த்தனேவும் இணைந்து பல சாதனைகளைப் படைத்துள்ளனர். அதிலும் விக்கெட் கீப்பராக உலக சாதனையை கையில் வைத்துள்ளவர் சங்கக்கரா.

5வது ரன் மெஷின்

5வது ரன் மெஷின்

சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த 5வது வீரர் சங்கக்கராதான். 134 போட்டிகளில் ஆடி 12,400 ரன்களைக் குவித்துள்ளார் சங்கக்கரா.

இலங்கையின் நம்பர் ஒன் வீரர்

இலங்கையின் நம்பர் ஒன் வீரர்

இலங்கை டெஸ்ட் வீரர்களில் அதிக ரன்களைக் குவித்த முதல் வீரரும் இவர்தான். இவருக்கு முன்பு இருந்த பல சாதனையாளர்களை முறியடித்து முதலிடத்தில் இருப்பவர் சங்கக்கரா.

டபுள் செஞ்சுரி சாதனையாளர்

டபுள் செஞ்சுரி சாதனையாளர்

சர்வதேச அளவில் அதிக அளவில் இரட்டை சதம் போட்ட சாதனையாளர் டான் பிராட்மேன்தான். 12 இரட்டை சதங்களை போட்டுள்ளார். அவருக்கு அடுத்து 11 இரட்டை சதங்களுடன் வலம் வந்தவர் சங்கக்கரா.

38 சதங்கள்

38 சதங்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 38 சதங்கள் போட்டுள்ளார் சங்கக்கரா. சச்சின், கல்லிஸ், பான்டிங் ஆகியோருக்கு அடுத்து 3வது இடத்தில் இருப்பவர் சங்கக்கரா.

பெஸ்ட் சராசரி

பெஸ்ட் சராசரி

பிராட்மேன், கென் பாரிங்டன், வாலி ஹேமன்ட், கர்பீல்ட் சோபர்ஸ் ஆகியோருக்கு அடுத்து அதிக டெஸ்ட் சராசரி வைத்துள்ள ஒரே வீரர் சங்கக்கராதான்.

இத்தனை இருந்தும்

இத்தனை இருந்தும்

இப்படி பல பெருமைகளுடன் கூடிய சங்கக்கராவுக்கு கடைசியில் ஓய்வின்போது கிடைத்தது ஏமாற்றம் கலந்த தோல்விதான். அதுவும் படு தோல்வியுடன் விடை பெற்றுள்ளார் சங்கக்கரா. உலக கோப்பை காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோற்றது இலங்கை. அத்தோடு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்தார் சங்கா. ஆகவே, டெஸ்ட், ஒன்டே இரண்டிலும் அவருக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது.

அஸ்வினையே சாரும்

அஸ்வினையே சாரும்

தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் கூட போடவில்லை சங்கக்கரா. அரை சதம் கூட போடவில்லை. முதல் இன்னிங்ஸில் 38 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 18 ரன்களும் மட்டுமே அவர் எடுத்தார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் அஸ்வினிடம் சிக்கி வீழ்ந்தார்.

படு தோல்வியுடன் குட்பை

படு தோல்வியுடன் குட்பை

சங்கக்கராவுக்கு இந்த டெஸ்ட் தொடரை அர்ப்பணிப்போம் என்று கூறியிருந்தார் இலங்கை கேப்டன் மாத்யூஸ். ஆனால் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்து, தோல்வியை சங்கக்கராவுக்குப் பரிசாக அளித்துள்ளது.

ஒருவேளை தொடரை வென்று அதை சங்கக்கராவுக்கு பரிசாக அளிக்கப் போகிறதோ இலங்கை... எப்படியோ சங்கக்கரா என்ற அருமையான வீரருக்கு, மனிதருக்கு பிரியா விடை கொடுப்போம்...!

Story first published: Monday, August 24, 2015, 14:09 [IST]
Other articles published on Aug 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+