Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சங்கக்கரா, ஜெயவர்த்தனே மீது இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை!

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சங்கக்கரா, ஜெயவர்த்தனே ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியுடன், சங்கக்கரா, ஜெயவர்த்தனே போட்டிகளிலிருந்து இருவரும் ஓய்வு பெற்றனர். ஆனால், இதுகுறித்து தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் பேட்டியளித்ததாக இலங்கை கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியது.

Sangakkara, Jayawardene in dispute with SL Cricket officials

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதையடுத்து நாடு திரும்பிய சங்கக்கராவும், ஜெயவர்த்தனேயும், தாங்கள் ஓய்வு பெறுவதாக பேட்டியளிக்கவில்லை என்றும், 20 ஓவர் போட்டிகளில் உலகக்கோப்பையே தங்களின் கடைசித் தொடர் என பேட்டிளித்ததாகவும் தெரிவித்தனர்.

ஆனால் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தங்களிடம் விசாரிக்காமலேயே விமர்சனங்களை முன் வைத்ததாக குற்றம்சாட்டினர்.

இப்படி சங்கக்கராவும், ஜெயவர்த்தனேயும் சர்ச்சைக்குரிய வகையில் பேட்டிளித்துள்ளது குறித்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Story first published: Wednesday, April 23, 2014, 17:56 [IST]
Other articles published on Apr 23, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+