Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் டெஸ்டுக்கு குட்பை சொல்கிறார் சங்கக்காரா!

கொழும்பு: ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இலங்கையின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் குமார் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடருடன் டெஸ்ட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள், சமூக வலைத்தளங்கள் மூலம், அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் குமாரா சங்கக்காரா, டெஸ்ட் போட்டிகளில் ஒய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் இந்தியா இலங்கையில் சுற்றுப் பயணம் செய்ய உள்ளது. அப்போது நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப்பின் ஒய்வு பெறபோவதாக அறிவித்தார்.

SANGAKKARA TO RETIRE AGAINST INDIA IN HOME SERIES

இதுவரை 131 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள சங்கக்காரா 12,271 ரன்கள் எடுத்து உள்ளார். உலக கோப்பையில், இலங்கை அணி காலிறுதி வரை முன்னேறி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அந்த போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து சங்கக்காரா ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கக்காராவின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமைக்கு, இலங்கை மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ரசிகர்கள் உண்டு. எனவே டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சங்கக்காராவை புகழ்ந்து வருகின்றனர்.

Story first published: Monday, June 29, 2015, 12:14 [IST]
Other articles published on Jun 29, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+