இந்தியாவில் கோஹ்லி மட்டுமல்ல, மற்றவர்களும் நல்ல பேட்ஸ்மேன்களே.. சங்ககாரா
Recommended Video

இந்தியாவில் கோஹ்லி மட்டுமல்ல, மற்றவர்களும் நல்ல பேட்ஸ்மேன்களே...சங்ககாரா- வீடியோ
லண்டன் : இந்திய அணி கோஹ்லியை சார்ந்தே இருக்கிறது என கூறுவது சரியல்ல, மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடும் திறன் பெற்றவர்களே என கூறி இருக்கிறார், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா.
அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “விராட் பேட்டிங் செய்வதை பார்ப்பது அற்புதமானது. அவர் சிறந்த ஆட்டக்காரர். அதே சமயம். மற்றவர்களும் அருமையான வீரர்களே. புஜாரா, ரஹானே அருமையான பேட்ஸ்மேன்கள். புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 50க்கும் அதிகமாக ஆவரேஜ் வைத்துள்ளார். ரஹானே வெளிநாடுகளில் 50க்கும் மேல் ஆவரேஜ் வைத்துள்ளார். கேஎல் ராகுல் புத்திசாலித்தனமான ஆட்டக்காரர். முரளி விஜய், ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் முக்கியத்துவம் அற்றவர்கள் என கூறி விட முடியாது” என கூறினார்.

அதே போல, இந்திய அணி இங்கிலாந்தில் தடுமாறி வருவதற்குக் காரணம் பயிற்சிகள் இல்லாதது தான் என கூறியுள்ளார். “அவர்கள் இங்கே தடுமாறி வருவதற்குக் காரணம் அவர்கள் தயார் நிலையில் இல்லாதது தான். நீங்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவே தயாராக முடியாது. எனவே, அவர்கள் நன்றாக சிந்திக்க வேண்டும். அந்த நம்பிகையை நீங்கள் வலைப் பயிற்சிகள், மற்றும் பயிற்சிப் போட்டிகள் மூலம் பெற முடியும்” என கூறினார்.
வீரர்களை மாற்றிக்கொண்டே இருப்பது குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “சில சமயம் வீரர்களை மாற்றுவதும், வெளியே அனுப்புவதும், எதிர்மறையாக இருக்காது. சில சமயம் எதிர்மறையாக இருக்கும். ஆனால், மாற்றங்கள் தந்திரமானதாக இருக்க வேண்டும். உண்மையில், இது வீரர்களுக்கான கேள்விதான். அவர்கள் இது குறித்து பேச வேண்டும். அவர்களை இது கவலையடையச் செய்தால், கேப்டன், பயிற்சியாளர் மற்றும் நிர்வாகத்திடம் கூட நேரடியாக பேசலாம்” என கூறினார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 18 தொடங்க உள்ளது. தற்போது, 0-2 என ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பின்தங்கி உள்ளதால், இந்த போட்டியில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும்.
Story first published: Thursday, August 16, 2018, 11:27 [IST]
Other articles published on Aug 16, 2018


Click it and Unblock the Notifications