மும்பை : பிரபல கிரிக்கெட் வீரர் முகமது சாமியும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைத்தளத்தில் வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவின் டென்னிஸ் விளையாட்டில் உச்சம் தொட்டவர் சானியா மிர்சா. 37 வயதான சானியா மிர்சா தற்போது டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அவர் விளையாடிய காலத்தில் மகளிர் இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார்.

ஆறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா வென்று சாதனை படைத்திருக்கிறார். இந்த நிலையில் சானியா மிர்சா கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயுப் மாலிக்கை ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஐந்து வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் சானியா மிர்சாவும் சோயிப் மாலிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியானது.
ஆனால் இது வதந்தி என்று பலரும் நினைத்த நிலையில் திடீரென்று சோயிப் மாலிக் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சோயிப் மாலிக் உடன் விவாகரத்து பெற்றதை சானியா மிர்சா உறுதி செய்து தனது முன்னாள் கணவருக்கு வாழ்த்துக்களும் கூறினார். இந்த நிலையில் சானியா மிர்சா பிரபல கிரிக்கெட் வீரர் முகமது சமியை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியானது.

முகமது சமியும் அவரது முதல் மனைவியுமான ஹசின் ஜஹான் விவாகரத்து செய்து கொண்டனர். மேலும் சமி மீது அவர் பலதரப்பு புகார்களை கூறியிருந்தார். எனினும் அது உண்மை இல்லை என்று நீதிமன்றத்தில் உறுதியானது. இந்த நிலையில் தற்போது சமி சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இதனால் 33 வயதான சாமியும் 37 வயதான சானியா மிர்சாவும் திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளத்தில் செய்து வெளியானது.
மேலும் இருவரும் நிச்சயதார்த்தம் நடந்தது போல் போட்டோவும் சமூக வலைத்தளத்தில் வெளிவந்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தியாவுக்கு விளையாட்டு உலகில் பெருமை சேர்த்த இருவரும் ஒன்றிணைந்து இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த புகைப்படம் போலியானது என்றும் அப்படி எந்த ஒரு திருமணமும் நடைபெறவில்லை என்பதுதான் உண்மை. ஏற்கனவே இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இப்படி செய்தி வெளியாகியிருப்பது இருவரின் மனதையும் பாதிக்க வைத்திருக்கிறது.