Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"மச்சான்..மச்சான்" இந்தியா-பாக் மேட்சில் கணவருக்கு நேர்ந்த சம்பவம்.. சானியா மிர்சாவின் செம ரியாக்சன்

அமீரகம்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது ரசிகர்கள் செய்த சுவாரஸ்ய விஷயத்திற்கு சானியா மிர்சா பதில் கொடுத்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியாக கடந்த 24ம் தேதியன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

முதல் முறையாக தோல்வி

முதல் முறையாக தோல்வி

இந்திய அணி தரப்பில் விராட் கோலியை தவிர்த்து வேறு யாரும் பெரியளவில் சோபிக்கவில்லை. உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதே இல்லை என்ற சாதனை இருந்து வந்தது. ஆனால் இந்த வெற்றியின் மூலம் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் படு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சுவாரஸ்ய நிகழ்வுகள்

சுவாரஸ்ய நிகழ்வுகள்

இந்திய அணி தோல்வியடைந்த போதும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறியது. அதாவது பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை கோலி கட்டியணைத்து பாராட்டினார். இதே போல பாகிஸ்தானின் இளம் வீரர்களுக்கு எம்.எஸ்.தோனி களத்தில் அறிவுரை கூறினார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் மற்றொரு சுவாரஸ்ய நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Recommended Video

IND Vs PAK கதறி அழுத Babar Azam’-ன் தந்தை video goes viral | Oneindia Tamil
பாகிஸ்தான் வீரருடன் உறவுமுறை

பாகிஸ்தான் வீரருடன் உறவுமுறை

இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் பவுண்டரி கோடுக்கு அருகே ஃபீல்டிங் செய்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென இந்திய ரசிகர்கள் அவரை "மச்சான்" என்று உறவு முறையுடன் அழைத்தனர். அதாவது பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை தான் கரம் பிடித்துள்ளார். எனவே அவருடன் உறவுமுறை கொண்டாடும் விதமாக அப்படி அழைத்துள்ளனர்.

சானியாவின் பதில்

இதுகுறித்த 9 விநாடிகள் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோவுக்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பதில் கொடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் 2 இதய எமோஜிகள் மற்றும் 2 சிரித்தபடியான எமோஜிக்களை பறக்கவிட்டுள்ளார். சோயிப் மாலிக் 2010 ஆம் ஆண்டு இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவை மணந்தார். இது விளையாட்டு உலகில் மிகவும் பிரபலமான திருமணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த புகழ்பெற்ற தம்பதியருக்கு இஷான் மிர்சா மாலிக் என்ற மகனும் உள்ளார்.

Story first published: Tuesday, October 26, 2021, 16:55 [IST]
Other articles published on Oct 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+