அமெரிக்க ஓபன்: கலப்பு இரட்டையரில் சானியா ஜோடி தோல்வி
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடி ஜோடி தோல்வியை சந்தித்தது.
கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் டொனால்டு யங், டெய்லர் டவுன்சென்ட் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

இரண்டாவது சுற்றில் செக் குடியரசின் பர்போரா க்ரெஜிகோவா மற்றும் குரோஷியாவின் மரின் டிரகன்ஜா ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவந்த க்ரெஜிகோவா ஜோடியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்க தவறிய சானியா ஜோடி அந்த செட்டை 3-6 என்று இழந்தது.
இந்த தோல்வியின் மூலம் அடுத்த செட்டை எளிதில் கைப்பற்றும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த செட்டையும் 4-6 என்று இழந்தது. இதன் மூலம் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் குரோஷியாவின் மரின் டிரகன்ஜா ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.


Click it and Unblock the Notifications