Sania Mirza : சோயிப் மாலிக்குடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி? யார் இந்த பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்?
கராச்சி: இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவை பிரிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், மூன்றாவதாக திருமணம் செய்துள்ள பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித் யார் என்பதை பற்றி பார்க்கலாம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் மற்றும் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா இருவரும் 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இரு நாடுகளின் உச்ச நட்சத்திரங்களாக இருந்த இருவரும் திருமணம் செய்து கொண்டது தலைப்பு செய்தியாக மாறியது. நட்சத்திர ஜோடியாக வலம் வந்த இவர்களுக்கு 2018ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு பின் சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திருமண வாழ்க்கை கசந்ததாக மறைமுகமாக ஒரு பதிவை எழுதிருந்தார். இதனால் சானியா மிர்சா - சோயிப் மாலிக் ஜோடி பிரிந்ததாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அந்த புகைப்படங்களை சோயிப் மாலிக் மற்றும் சனா ஜாவித் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தான் நடிகையான சனா ஜாவித், 2012ஆம் ஆண்டு முதல் ஷெ-இ-ஷாத் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர். அதன்பின் ஹானி என்ற படத்தின் மூலமாக பிரபல நடிகையாக மாறியவர். இவர் முன்னதாக பாகிஸ்தான் நடிகரும், இசையமைப்பாளருமான உமைர் ஜாஸ்வால் என்பவரை 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
3 ஆண்டுகளுக்கு பின் இந்த தம்பதியினர் பிரிந்தனர். இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து புகைப்படங்களை நீக்கியதன் மூலம் இவரும் விவாகரத்து பெற்று கொண்டது உறுதி செய்யப்பட்டது. 30 வயதாகும் சனா ஜாவித், தற்போது சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் எப்படி சந்தித்து கொண்டார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இவரை இன்ஸ்டாகிராமில் 8.4 மில்லயன் பேர் சனா ஜாவித்தை பின் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications