Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குல்தீப் யாதவின் மிகப்பெரிய ரசிகன் நான்... புகழ்ந்து தள்ளிய முன்னாள் பேட்டிங் கோச்!

டெல்லி : குல்தீப் யாதவின் மிகப்பெரிய ரசிகன் நான் என்று இந்தியாவின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். அவரை இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகக்குறைந்த போட்டிகளிலேயே 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த குல்தீப் யாதவ் இங்கிலாந்து தொடரில் எடுத்த 5 விக்கெட்டுகள் அந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற காரணமாக இருந்ததாகவும் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐபிஎல் போட்டிகளில் அவர் தனது திறனை நிரூபிக்க தவறிவிட்டதை சுட்டிக்காட்டிய சஞ்சய் பாங்கர், இந்த ஐபிஎல் போட்டியில் அவர் திறமையுடன் விளையாடும் நிலையில், அவரை அணியிலிருந்து விலக்குவது கடினமானது என்றும் தெரிவித்துள்ளார்.

 குல்தீவ் யாதவின் ரசிகர்

குல்தீவ் யாதவின் ரசிகர்

இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர், தான் குல்தீப் யாதவின் மிகப்பெரிய ரசிகன் என்று தெரிவித்துள்ளார். குல்தீப் மிக குறுகிய காலத்திலேயே சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இங்கிலாந்து தொடரில் இந்தியா வெற்றிபெற அவர் எடுத்த 5 விக்கெட்டுகளே காரணம் என்றும் சஞ்சய் புகழாரம் சூட்டியுள்ளார்.

 வரும் போட்டியில் சிறந்து ஆடுவார்

வரும் போட்டியில் சிறந்து ஆடுவார்

கடந்த ஐபிஎல் தொடரில் குல்தீப் யாதவ் தனது சிறப்பான ஆட்டத்தை தரத் தவறிவிட்டார் என்று கூறியுள்ள சஞ்சய், குல்தீப் வரும் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக ஆடுவார் என்றும், அதையடுத்து அவரை அணியில் இருந்து விலக்கி வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

 சஞ்சய் பாங்கர் ஆலோசனை

சஞ்சய் பாங்கர் ஆலோசனை

இந்திய அணிக்கு தற்போதைய முக்கிய தேவை ஆல்ரவுண்டர் மட்டுமே. முக்கிய நேரங்களில் நான்கு ஓவர்களை சிறப்பாக கையாளவும் 7வது பேட்ஸ்மேனாக களம் காணவும் ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறார். ரவீந்திர ஜடேஜா இந்த இடத்தை பூர்த்தி செய்வார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 குருணால் பாண்டியா அதற்கு சரிபட்டு வரமாட்டார்

குருணால் பாண்டியா அதற்கு சரிபட்டு வரமாட்டார்

சமீப காலங்களில் ஆல் ரவுண்டராக தன்னை ரவீந்திர ஜடேஜா நிலைநிறுத்திக் கொண்டுள்ளதாகவும், குருணால் பாண்டியாவால் 4 ஓவர்களை சிறப்பாக கையாள முடியாது என்றும் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, November 28, 2019, 20:09 [IST]
Other articles published on Nov 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+