Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெண்ணாக மாறிய சஞ்சய் பங்கர் மகன்.. ஆடையின்றி பிரபல கிரிக்கெட் வீரர் போட்டோ அனுப்புவதாக புகார்

மும்பை: பிரபல கிரிக்கெட் வீரரும் முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் அண்மையில் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார். உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வந்த சஞ்சய் பங்கரின் மகன் இந்த மாற்றம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

தான் சிறுவயதில் இருந்தே பெண்ணாக இருக்கவே விருப்பம் இருந்ததால் இந்த முடிவை மேற்கொண்டதாக சஞ்சய் பங்கரின் மகன் தெரிவித்திருந்தார். தற்போது அவர் தன்னுடைய பெயரை அன்ணையா என்றும் மாற்றிக்கொண்டார்.

Sanjay Bangar Anaya

இந்த நிலையில் சஞ்சய் பங்கரின் மகனான அன்னையா நேர்காணலில் ஒரு அதிர்ச்சிகர சம்பவத்தை தெரிவித்திருக்கிறார். தற்போது அன்னையா இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அப்போது இந்தியா வந்து செல்லும் பழக்கத்தையும் வைத்திருக்கிறார். இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தான் பட்ட கஷ்டங்களை தெரிவித்து இருக்கிறார்.

அதில் நான் பெண்ணாக மாறியதற்கு சிலர் ஆதரவும் தெரிவித்தார்கள். ஆனால் சிலர் என்னிடம் தவறாகவும் நடந்து கொண்டிருக்கிறார்கள். என்னுடன் விளையாடிய வீரர்களும் இல்லை என்னை தெரிந்த சில பிரபல கிரிக்கெட் வீரர்களும் அவர்களுடைய நிர்வாண புகைப்படங்களை எனக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

இங்கு பலரும் ஆணாதிக்க புத்தியுடன் நான் இருக்கின்றார்கள். நான் சப்ராஸ்கான், முசிர்கான், ஜெய்ஸ்வால் போன்ற கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடுகின்றேன். ஆனால் நான் எப்போதும் சஞ்சய் பங்கரின் மகள் என்று யாரிடம் தெரிவித்தது கிடையாது .கிரிக்கெட் உலகமே ஆணாதிக்கத்தால் நிறைந்து இருக்கிறது. நான் பெண்ணாக மாறியதிலிருந்து என்னை பலரும் ஆபாசமாகத்தான் பார்க்கிறார்கள்.

பலரும் என்னிடம் வந்து எனது போட்டோவை கேட்கிறார்கள். ஒரு முறை நான் இந்தியாவுக்கு வந்திருந்த போது ஒரு பிரபல கிரிக்கெட் வீரரிடம் என்னுடைய சூழ்நிலையை கூறினேன். ஆனால் அவர் என்னுடன் காரில் வா, என்னுடன் ஒரு இரவு வா என்று படுக்கைக்கு அழைக்கின்றார். இப்படிப்பட்ட கஷ்டங்களை எல்லாம் நான் சந்தித்து வருகின்றேன். எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும்போது என்னுடைய தாயின் ஆடைகளை எடுத்து அணிந்து கொள்வேன். அப்போது கண்ணாடியில் பார்க்கும்போது என்னை நான் ஒரு பெண்ணாகவும் பெண்ணாகவே வளர வேண்டும் என்றும் ஆசைப்பட்டேன் என்று அண்ணையா கூறியுள்ளார்.

Story first published: Friday, April 18, 2025, 19:01 [IST]
Other articles published on Apr 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+