Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் இல்லேன்னா டீமும் இல்ல.. தோனியும் இல்லே..! ஆத்திரத்தில் ரூமுக்கே போய் சண்டை போட்ட கோச்..!!

Recommended Video

Watch Video : Sanjay bangar verbal fight with selection committee member

மும்பை: தேர்வுக்கு குழு அதிகாரி தேவாங் காந்தியிடம் ஆத்திரத்தில் சஞ்சய் பங்கர் சண்டையில் ஈடுபட்ட விவகாரம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளுக்கு அண்மையில் ஆட்கள் நியமிக்கப்பட்டனர். ரவி சாஸ்திரி பயிற்சியாளராக மீண்டும் தேர்வு செய்யப் பட்டார்.

2021ம் ஆண்டு டி 20 உலக கோப்பை தொடர் வரை பயிற்சியாளராக தொடர்வார். பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டார். பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண், மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோர் தொடர்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பதவி முடிவு

பதவி முடிவு

இந்தியாவுடன் 5 ஆண்டுகளாக பேட்டிங் பயிற்சியாளராக இருந்த பங்கரின் பதவி, முடிவுக்கு வந்துவிட்டது. அவருடைய பதவிக்காலம், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிந்தது. இதற்கிடையே, அவர் தேர்வுக்குழுவினரிடம் சண்டை போட்ட விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை கூட்டி இருக்கிறது.

புறக்கணிப்பு தகவல்

புறக்கணிப்பு தகவல்

அதாவது, தேர்வுக்குழுவில் இருந்து பங்கர், புறக்கணிப்பட்டதற்காக தேர்வுக்குழு அதிகாரிகளில் ஒருவரான தேவாங் காந்தி காரணம் என்ற தகவல் உலா வருகிறது. அதன் எதிரொலியாக சஞ்சய் பங்கர், 15 நாட்களுக்கு முன்பு, சண்டையிட்டதாக தெரிகிறது.

ஆத்திரத்தில் சண்டை

ஆத்திரத்தில் சண்டை

இது தொடர்பாக வெளியான தகவல்கள் வருமாறு: தேவாங் காந்தி தங்கியிருந்த அறைக்கு சஞ்சய் பங்கர் கடுமையான ஆத்திரத்துடன் வந்திருக்கிறார். இந்திய அணி என்னை தான் நம்பியிருக்கிறது, இல்லை என்றால அணி அப்படியே காலியாகி விடும் என்றும் சத்தம் போட்டதாக தெரிகிறது.

வாக்குவாதம்

வாக்குவாதம்

அணியில் என்னை நீக்கியது அவசியம் இல்லாத நடவடிக்கை, பொறுப்பில் இருந்து நீக்கினால் கூட, தேசிய கிரிக்கெட் அகாடமியில் தமக்கு ஒரு பொறுப்பு வழங்கி யிருக்கலாம் என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

நடவடிக்கை பாய்கிறது

நடவடிக்கை பாய்கிறது

சஞ்சய் பங்கரின் இந்த தரக்குறைவான விமர்சனம், மோசமான நடத்தை பிசிசிஐக்கு கடும் நெருக்கடியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவரின் செயல் பாடுகளை அடிப்படையாக கொண்டு நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, வினோத் ராயின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிகிறது.

தோனி சர்ச்சை

தோனி சர்ச்சை

முன்னதாக பங்கர் மீது ஏற்கனவே ஒரு சர்ச்சை நிலுவையில் இருக்கிறது. அதாவது நியூசிலாந்துடனான அரையிறுதியில், தோனியை மாற்றி களம் இறக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால் அதை மாற்றி சொல்லி, பிசிசிஐக்கு நெருக்கடியை கொடுத்தவர் என்ற பேச்சு இருக்கிறது.

Story first published: Wednesday, September 4, 2019, 13:39 [IST]
Other articles published on Sep 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+