Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அறிவில்லாமல் பேசி வருகிறார் ரவி சாஸ்த்ரி..!! ரவி சாஸ்த்ரி பேச்சுக்கு சஞ்சய் மஞ்சரேக்கர் கண்டனம்..!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரியின் பேச்சுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Sanjay Manjrekar Opines On The Virat Kohli-Ravi Shastri Era | Oneindia Tamil

ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் ஊதியம் வாங்கிய பணக்கார பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரியின் கீழ் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் குறிப்பிட தகுந்த வெற்றியை பெற்றாலும், ஐ.சி.சி. தொடர்களில் மண்ணை கவ்வியது.

இதனால், அவரது பதவிக்கு ஆபத்து இருப்பதை அறிந்த ரவி சாஸ்த்ரி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

சர்ச்சை பேச்சு

சர்ச்சை பேச்சு

தற்போது வீட்டில் சும்மா இருக்கும் ரவி சாஸ்த்ரி, சமீப காலமாக தேவையில்லாத பேட்டிகளை கொடுத்து ஏற்கனவே சிக்கலில் இருக்கும் இந்திய கிரிக்கெட்டை மேலும் குழப்பி வருகிறார். அன்மையில் பேசிய அவர் கங்குலி, சச்சின் கேப்டனாக இருக்கும் போது எந்த கோப்பையை வாங்கி இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

கங்குலியை சீண்டல்

கங்குலியை சீண்டல்

மேலும், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கோலி மேலும் 2 ஆண்டுகள் நீடித்து இருந்திருப்பார். ஆனால் அவர் இன்னும் அதிக வெற்றிகளை பெற்று இருந்தால் இங்கு சிலரால் ஜீரணித்து இருந்திருக்க முடியாது என்று தேவையில்லாமல் கமெண்ட் விட்டார். ரவி சாஸ்த்ரியின் இந்த பேச்சு, எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றியது போல் உள்ளது.

உள்நோக்கத்துடன் பேச்சு

உள்நோக்கத்துடன் பேச்சு

இந்த நிலையில் ரவி சாஸ்த்ரியின் பேச்சுக்கு சஞ்சய் மஞ்சரேக்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரவி சாஸ்த்ரியின் இந்த 2.0 அவதாரத்தை காணும் போது வியப்பாக இருப்பதாக அவர் கிண்டல் அடித்துள்ளார். ரவி சாஸ்த்ரி மீது மரியாதை வைத்துள்ளேன், அவர் தலைமையில் விளையாடி இருக்கிறேன். ஆனால் இப்போது உள்நோக்கத்துடன் ரவி சாஸ்த்ரி பேசி வருகிறார்.

கண்டனம்

கண்டனம்

ரவி சாஸ்த்ரி தற்போது பேசும் வார்த்தைகளை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அறிவில்லாமல் பேசி வருகிறார் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு எது நல்லதோ, அதை தவிர மற்றதை எல்லாம் ரவி சாஸ்த்ரி பேசுவதாக கூறியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், இந்திய அணியை 3 வகை கிரிக்கெட்டிலும் வழிநடத்தும் தகுதி ரோகித் சர்மாவுக்கு மட்டுமே இருப்பதாக கூறியுள்ளார்.

Story first published: Wednesday, January 26, 2022, 16:29 [IST]
Other articles published on Jan 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+