Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டிங் வேண்டும் என்பதற்காக ஷமியை உட்கார வைப்பீங்களா? 7 பேட்டர்ஸ் போதாதா?சஞ்சய் மஞ்சுரேக்கர் கேள்வி

மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ளது.

பிளேயிங் லெவனில் யாரை சேர்க்க வேண்டும்? எத்தனை பேட்ஸ்மேன் இடம்பெற வேண்டும்? எத்தனை பந்துவீச்சாளர்கள் விளையாட வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Sanjay manjrekar asks team india to use mohammed shami in place of shardul

இந்த நிலையில் இந்திய அணியில் சர்துல் தாக்கூரை எட்டாவது வீரராக சேர்த்து பேட்டிங்கை வலுப்படுத்தும் முயற்சியில் ரோகித் சர்மா ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக முகமது சமி அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் சர்துல் தாக்கூர் அந்தப் போட்டியில் வெறும் 3 ரன்கள் மட்டும்தான் அடித்திருந்தார்.தற்போது இது குறித்து பேசி உள்ள சஞ்சய் மஞ்சுரேக்கர், இந்திய அணியில் தரம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் நம்பிக்கையாக இருக்கின்றேன்.

அணியில் இடம் பிடித்திருக்கும் வீரர்களின் முதன்மையான திறமை தான் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நமது பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் ஜடேஜா இருந்தால் நாம் கூடுதலாக ஒரு ஆல் ரவுண்டரை சேர்க்க தேவையில்லை. ஜடேஜா இருப்பதே பேட்டிங்கிற்கு கீழ் வரிசையில் போதுமானது. பேட்டிங் வேண்டும் என்பதற்காக நமது பந்துவீச்சின் தரத்தை நாம் தியாகம் செய்யக்கூடாது. ஏனென்றால் சமி போன்ற ஒரு வீரரை வெளியே உட்கார வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

அப்படி ஒரு முடிவை நான் எப்போதும் எடுக்க மாட்டேன். ஆனால் அணி நிர்வாகம் சர்துல் தாக்கூருக்கு தான் முன்னுரிமை கொடுக்கும் என நான் கருதுகிறேன். இதேபோன்று பேட்டிங்கில் இசான் கிசனுக்கு தான் நீங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர் தன்னுடைய திறமையை நிரூபித்து விட்டார். கே எல் ராகுல் தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.

காயத்திலிருந்து வந்த வீரரை பெரிய தொடர்களில் உடனடியாக விளையாட வைப்பது எப்போதுமே ஆபத்து தான்.தற்போது யார் ஃபார்மில் இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும். இது நீ சிறந்த வீரரா? நான் சிறந்த வீரரா என்ற பேச்சுக்கே இடமில்லை, நடைமுறைக்கு ஏற்ற முடிவுகளை தான்எடுக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார்.

Story first published: Friday, September 8, 2023, 23:47 [IST]
Other articles published on Sep 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+