Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி தியாகம் செய்ய வேண்டும்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் தந்த யோசனை.. சரிப்பட்டு வருமா?

ஐதராபாத் : இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் கே எல் ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல் ஆகியோர் இந்த தொடரில் விளையாடவில்லை.

இதனால், இந்திய அணியில் இசான் கிஷன் நடுவரிசையில் திரும்பி உள்ளார். மேலும் ரஜட் பட்டிதார் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

 மஞ்சுரேக்கரின் ஐடியா

மஞ்சுரேக்கரின் ஐடியா

எனினும் அணியில் சூரியகுமார் யாதவ்க்கும், இஷான் கிஷணுக்கும் தான் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சு மஞ்சுரேக்கர் விராட் கோலிக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அணியை தேர்வு செய்வதில் மிகவும் குழப்பமான நிலை நீடிக்கும். ஏதேனும் ஒரு வீரர் நிச்சயமாக ஏமாற்றத்தை அடைவார். இதனால் இந்த குறையை போக்க நான் ஒரு ஐடியா சொல்கிறேன்.

கோலி தியாகம்

கோலி தியாகம்

சுப்மான் கில்லை மூன்றாவது வீரராக களம் இறக்க வேண்டும். அவர் இந்த பொறுப்பை நிச்சயமாக சிறப்பாக கையாள்வார் என நான் நம்புகிறேன். விராட் கோலி அவருடைய மூன்றாவது இடத்தை தியாகம் செய்து நான்காவது இடத்தில் விளையாட வேண்டும். விராட் கோலி இதனை ஏற்கனவே அம்பத்தி ராயுடுக்காக ஒரு முறை செய்திருக்கிறார். இப்படி செய்வது மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும்.

நிராகரித்த இந்திய அணி

நிராகரித்த இந்திய அணி

இசான் கிஷன் இரட்டை சதம் அடித்த பிறகு அணிக்குள் வருகிறார். இதனால் தொடக்க வீரர்களாக வலது இடது பேட்ஸ்மேன்கள் விளையாடினால் அது எதிரணிக்கு நெருக்கடியை கொடுக்கும் என்று அவர் கூறினார். ஆனால் சஞ்சு மஞ்சுரேக்கரின் இந்த ஐடியாவை இந்திய அணி நிராகரித்துள்ளது.நடு வரிசையில் கே எல் ராகுல் இடத்திற்கு பதிலாக இஷான் கிஷனையும், சூரியகுமார் யாதவை நான்காவது இடத்திலும் களம் இறக்கி உள்ளது.

ரிஸ்க்கான காரியம்

ரிஸ்க்கான காரியம்

இதன் மூலம் தொடக்க வீரராக சுப்மான் கில், ரோகித் சர்மாவும் நம்பர் 3வது வீரராக விராட் கோலியும் களமிறங்கி இருக்கிறார். உலகக்கோப்பைத் தொடர் இன்னும் ஆறு மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் , இப்படி ரிஸ்க் எடுப்பது தேவையற்றது என இந்திய அணி நிர்வாகம் நினைக்கிறது. மேலும் சுப்மான் கில் தொடக்க வீரராக நன்றாக விளையாடி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, January 18, 2023, 16:29 [IST]
Other articles published on Jan 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+