Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கிட்டு உக்காந்துக்குங்க.. முன்னாள் வீரரை வளைத்து வளைத்து செய்த ரசிகர்கள்!

மும்பை : இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தொடர்ந்து சர்ச்சைகளிளும், ரசிகர்களின் எதிர்ப்புகளை சம்பாதிக்கும் வகையிலும் கருத்து சொல்லி வருகிறார்.

தற்போது அவர் ஒருநாள் போட்டி குறித்து கூறியுள்ள ஒரு விஷயத்தை, ரசிகர்கள் வைத்து செய்து வருகிறார்கள்.

10 ஓவர் அதிகம்

10 ஓவர் அதிகம்

சஞ்சய் தன் ட்விட்டர் பக்கத்தில் "50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் எப்போதும் ஒரு பத்து ஓவர் அதிகமாக இருக்கிறது" என ஒரு கருத்தை பகிர்ந்தார். சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்த கருத்தை ரசிகர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

கமண்டரியும் அதே தான்

இது தற்போதைய சூழலில் தேவையற்ற கருத்து என நினைத்த ரசிகர்கள், அவரை கேலியும், கிண்டலும் செய்யத் துவங்கினர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம். "நீங்க கமண்டரி செய்யும் போது என் நண்பர் கிட்ட இதையே தான் சொல்லுவேன்" என ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.

டிவியை ஆஃப் செஞ்சுட்டு போங்க

"அப்படினா 40 ஓவருக்கு அப்புறம் டிவியை ஆஃப் செஞ்சுட்டு போங்க" என்கிறார் இவர்.

காது வலிக்குது

"உங்க கமண்டரி கேட்டு எரிச்சலாகி, என் காது வலிக்குது" என நேரடித் தாக்குதலில் குதித்துள்ளார் இந்த ரசிகர்.

மானம் போச்சு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டி ஒன்றில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், 31 பந்துகளில் 7 ரன்கள் அடித்ததை படம் போட்டுக் காட்டியுள்ளார் இவர்.

ஐசிசி கூட கண்டுக்க மாட்டாங்க

உங்க ட்வீட்டை ஐசிசி படிச்சாலும் கண்டுக்க மாட்டாங்க என்கிறார் இந்த ரசிகர்.

25 நிமிஷம் அதிகம்

உங்க 30 நிமிஷம் கமண்டரி, 25 நிமிஷம் அதிகமா இருக்கு. என மரண கலாய் கலாய்த்துள்ளார்.

தஞ்சாவூர் கல்வெட்டுல..

தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கிட்டு பக்கத்துல உக்காந்துக்கோ

Story first published: Monday, March 4, 2019, 17:58 [IST]
Other articles published on Mar 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+