அந்த ஜாம்பவானை அப்படியே பிரதிபலித்த கேப்டன் கோலி.. என்ன இவரா பாராட்டுறது?.. ஆச்சர்யமா இருக்கே!
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வீரர்கள் விடாப்பிடியாக போராடி வருவதால் போட்டி பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி வீரர்கள் முதலில் திணறிய நிலையில் நேற்று முதல் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
முதல் இன்னிங்சில் இந்திய அணியை பண்ட், வாஷிங்கடன் சுந்தர் மற்றும் புஜாரா அதிரடியாக ஆடி மீட்டனர். இந்த நிலையில் 2வது இன்னிங்சில் அஸ்வின் அபார பந்துவீச்சு இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

முதல் இன்னிங்சில் திணறல்
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட்டின் அபார ஆட்டத்தால் அந்த அணி 578 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. ஆனால் இந்திய அணியோ 3வது நாள் ஆட்டநேர முடிவில் 257 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மீண்டெழுந்த இந்தியா:
இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆன நிலையில் இந்திய வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், புஜாரா, ரிஷப் பண்ட் ஆகியோர் அதற்கு முட்டுக்கட்டை போட்டனர். அவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நம்பிக்கை நாயகன் அஸ்வின்
ஒரு புறம் இந்திய பேட்ஸ்மேன்கள் கைகொடுத்து உதவ மற்றொரு புறம் அஸ்வின் ஒற்றை ஆளாக இங்கிலாந்து அணியை திணறடித்தார். குறிப்பாக 2வது இன்னிங்சில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்ததன் மூலம் 100 ஆண்டுகால சாதனையை சமன் செய்தார். 2வது இன்னிங்சில் மட்டும் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

கோலி தி கேப்டன்
இந்திய அணி திணறிய போதும் அவர்களை சரியான முறையில் கையாண்டதற்கு கேப்டன் கோலிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இது குறித்து போட்டியின் போது பேசிய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், நெருக்கடியின் போது அவரின் கேப்டன்சி மற்றும் நம்பிக்கை மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் விவின் ரிச்சார்டஸை பிரதிபலித்ததாக பாராட்டியுள்ளார்.

இறுதிகட்ட பரபரப்பு
முதல் முறையாக கோலியை சஞ்சய் மஞ்சிரேக்கர் இப்படி பாராட்டி உள்ளார். இன்று 5ம் நாள் ஆட்டத்தை தொடங்கியுள்ள இந்திய அணி 70 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. வெற்றி பெற இன்னும் 334 ரன்கள் தேவைப்படும் நிலையில் சுப்மன் கில் மற்றும் கோலி களத்தில் உள்ளனர். இதனால் போட்டி யார் பக்கம் செல்லும் என்ற பரபரப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications