Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிளாஸ் பிளேயரா இருந்தா இப்படி செய்வாரா? ரஹானே குறித்து மஞ்சரேக்கர் வம்படி ட்வீட்

சென்னை: அஜின்க்யா ரஹானேவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து சஞ்சய் மஞ்சரேக்கர் தனது ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் அவ்வப்போது தனது சில கருத்துக்களால் விமர்சனத்துக்கு உள்ளாவது வழக்கம். ஜடேஜா குறித்தும், அவரது திறமை குறித்தும் இவரது பேச்சு, நேரடியாகவே ஜடேஜா பதிலடி கொடுக்கும் அளவுக்கு சென்றது. தற்போது இந்திய துணை கேப்டன் ரஹானேவை அவர் டார்கெட் செய்திருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 1 ரன்னில் அவுட்டான ரஹானே, இந்தியா டிரா செய்ய போராடிய இரண்டாம் இன்னிங்ஸில் 0 ரன்களில் ஸ்டெம்ப்புகள் தெறிக்க வெளியேறினார்.

Sanjay Manjrekar explains his issue with Ajinkya Rahane ind vs eng 2021

முன்பெல்லாம், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கடினமான டெஸ்ட் தொடர்களில் சதம் அடிப்பதில் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயர் பெற்றவர் ரஹானே. ஆனால், சில வருடங்களாக அவரால் பெரியளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை.

2019ல் ராஞ்சியில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், சமீபத்தில் தான் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்திருந்தார்.

இந்நிலையில் ரஹானே குறித்து ட்வீட் செய்துள்ள சஞ்சய், "ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் சதம் அடித்த பிறகு ரஹானே அடித்த ஸ்கோர் 27*, 22, 4, 37, 24, 1 & 0 மட்டுமே. இது தான் அவரிடம் உள்ள பிரச்சனை. சதம் அடித்தால் கிளாஸ் பிளேயர்கள் தங்களது ஃபார்மை அப்படியே தொடர்வார்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.

Story first published: Tuesday, February 9, 2021, 19:10 [IST]
Other articles published on Feb 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+