Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி குறித்து கம்பீர் சர்ச்சை கருத்து.. மஞ்ச்ரேக்கர் தந்த தரமான பதிலடி.. காரணம் சச்சின் தான்!

கவுகாத்தி: இந்திய வீரர் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை ஒப்பிட்டு கவுதம் கம்பீர் பேசிய சர்ச்சை கருத்துக்கு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1 - 0 என முன்னிலை பெற்றிருக்கிறது.

இப்போட்டியில் இந்தியா பெற்றதில் இருந்து விராட் கோலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 87 பந்துகளை சந்தித்த கோலி 12 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் சேர்த்து 113 ரன்களை விளாசினார்.

சாதனை காத்திருப்பு

சாதனை காத்திருப்பு

இந்த சதத்தின் மூலம் கோலிக்கு முக்கிய சாதனை நெருங்கியுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களை விளாசியுள்ளார். விராட் கோலி நேற்று இலங்கைக்கு எதிராக சதத்துடன் சேர்த்து 45 என்ற எண்ணிக்கையில் உள்ளார். இன்னும் 5 சதங்களை அடித்துவிட்டால் விராட் கோலி பிரமாண்ட சாதனையை தனதாக்குவார்.

கம்பீர் விளக்கம்

கம்பீர் விளக்கம்

ஆனால் சச்சினை கோலி முந்த வாய்ப்பே இல்லை என கம்பீர் சர்ச்சையாக பேசினார். அதில், நிச்சயமாக சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார். இன்னும் பல சாதனைகளை கூடவும் அடிக்கலாம். ஆனால் அப்போது இருந்த விதிமுறைகள் வேறு, தற்போதுள்ள விதுமுறைகள் வேறு ஆகும். அப்போதைய காலத்தை ஒரு இன்னிங்ஸில் 1 புதிய பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது 2 புது பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் தற்போது 5 பீல்டர்கள் நிறுத்தப்படுகிறார்கள். எனவே சச்சினுடன் ஒப்பிடவே முடியாது என கம்பீர் விளக்கம் அளித்திருந்தார்.

மஞ்ச்ரேக்கரின் பதிலடி

மஞ்ச்ரேக்கரின் பதிலடி

இந்நிலையில் கம்பீருக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதிலடி தந்துள்ளார். காலக்கட்டங்களை ஒப்பிடவே கூடாது. அதுவும் ஒரு புதிய பந்து தற்போது 2 புதிய பந்து எனக்கூறி ஒப்பிடக்கூடாது. சச்சின் டெண்டுல்கர் ஒரு மாஸ்டர் என்பதை மறுக்கவே முடியாது. ஆனால் அவரை போல விராட் கோலி ஓப்பனராக களமிறங்கி விளையாடவில்லை. அவர் முதல் பந்தில் இருந்தே விளையாடுவது கிடையாது.

பேட்டிங் இடம்

பேட்டிங் இடம்

விராட் கோலி பெரும்பாலும் 3வது வீரராக தான் களத்திற்கு வருகிறார். சமீபத்தில் நடந்த போட்டியில் கூட 20 ஓவர்கள் வந்த பிறகு தான் வந்தார். எனவே நிச்சயம் விராட் கோலி சச்சினை முந்துவார். சச்சினை முந்துவதற்கு இன்னும் 4 சதங்கள் தான் தேவை. அதையும் ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடத்திற்குள் முறியடித்துவிடுவார் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, January 11, 2023, 16:27 [IST]
Other articles published on Jan 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+