அவர சிறந்த பவுலர் கிடையாது.. அஸ்வினை சீண்டிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்..கொந்தளித்த ரசிகர்கள்- காரணம் என்ன?
மும்பை: அஸ்வினை சிறந்த பவுலர் இல்லை எனக்கூறிய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வம்பிழுத்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்கி வருகிறது.
இங்கிலாந்து களம் வேகப்பந்துவீச்சு உகந்ததாக இருந்தாலும், ரவிச்சந்திரன் அஸ்வின் அங்கு அசத்தலாக விளையாடுவார் என்றும், அவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின்
சர்வதேச கிரிக்கெட்டில் தலை சிறந்த ஸ்பின்னராக விளங்குபவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்களை எடுத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் வரும் நாட்களில் முத்தையா முரளிதரனின் சாதனைகளை முறியடித்து (All time Great) அனைத்து காலத்திலும் சிறந்த வீரர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மஞ்ச்ரேக்கர்
இந்நிலையில் அவரை All Time Great எனக்கூறுவதை எதிர்ப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரவிச்சந்திரன் அஸ்வின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் விளையாடி வருவதை பார்க்கும் போது அவர் ஒரு சிறந்த வீரர் என்று நான் நினைக்கிறேன், ஆனால் 'எல்லா காலத்திலும் சிறந்த வீரர்' என மக்கள் அவரை கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

பிரச்னை என்ன
அஸ்வினிடம் உள்ள பிரச்னை என்னவென்றால் SENA என கூறப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ள மைதானங்கள் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாகும். ஆனால் இந்த நாடுகளில் அஸ்வின் ஒரு முறை 5விக்கெட் வீழ்த்தியதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் இந்திய ஆடுகளங்களில் மட்டுமே அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். இந்திய ஆடுகளங்கள் அவருடைய சுழலுக்கு ஏற்றார்போல் இருப்பதால்தான் அவரால் இங்கு விக்கெட் வீழ்த்த முடிகிறது.

அக்ஷர் பட்டேல்
அஸ்வினை போலவே தான் ரவீந்திர ஜடேஜாவும்,இந்திய ஆடுகளங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்டவர். அதே போல கடந்த இங்கிலாந்து தொடரில் இந்திய ஆடுகளங்களில் அஷ்வினைவிட அக்சர் பட்டேல் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றினார். பல வீரர்களும் இப்படி இருக்கும் போது அஸ்வினை எப்படி அனைத்து கால சிறந்த பவுலர் என்று கூறுவது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications