
படுதோல்வி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. சொந்த மண்ணில் ஏற்பட்டுள்ள இந்த ஏமாற்றம், விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி தொடர்ந்து பெறும் 4வது தோல்வியாகும். மேலும் கடந்த 22 ஆண்டுகளில் சென்னையில் இந்திய அணி தோற்பது இதுவே முதல் முறையாகும்.

விளக்கம்
முதல் டெஸ்ட் தோல்வி குறித்து பேசிய சஞ்சய் மஞ்ச்ரேகர், இந்திய அணி தவறு செய்தது என்றும் வியூகம் சரியாக வகுக்கவில்லை என நான் கூறமாட்டேன் என தெரிவித்துள்ளார். நதீம் சரியாக பந்துவீசாததால் குல்தீப் யாதவை ரசிகர்கள் கேட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், அணியில் வீரர்கள் தேர்வு நன்றாக தான் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

புரிந்துக்கொள்ள முடியவில்லை
அவுட் சைட் ஆஃப் ஸ்ட்ம்பில் சிறப்பாக பந்துவீசி பேட்ஸ்மேன்களை திணறடிக்க கூடிய வாஷிங்டன் சுந்தர், ஆட்டத்தின் ஒரு சில சமயங்களில் பவுலிங் லைன் சரியாக வீசவில்லை என தெரிவித்துள்ள மஞ்ச்ரேக்கர், இது போன்ற இடங்களில் கோலியின் வியூகமும், அணி தேர்வும் குழப்பமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

நதீம் பந்துவீச்சு ஏமாற்றம்
இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல பலன் அளித்த சென்னை களத்தில் ஷபாஷ் நதீம் வெறும் 4 விக்கெட்டை மட்டும் கைப்பற்றி ஏமாற்றம் அளித்துள்ளதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு காரணம் நதீமால் களத்தில் சுதந்திரமாக செயல்பட முடியாமல் போனதாகவும் எனவே கோலி இதுபோன்ற இடங்களில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications