அஸ்வின் ஸ்மார்ட்னஸ் 'அந்நியன்' பட மீம் மூலம் மஞ்ச்ரேக்கருக்கு பதிலடி.. விடாப்பிடியாய் வரும் பிரச்னை
மும்பை: அஸ்வின் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இடையேயான பிரச்னை இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்கி வருகிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின் அசத்தலாக விளையாடுவார் என்றும், அவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது. ஆனால் அவரின் திறமை குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்திருந்தார்.

மஞ்ச்ரேக்கர்
அஸ்வின் குறித்து பேசிய அவர், ரவிச்சந்திரன் அஸ்வின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் விளையாடி வருவதை பார்க்கும் போது அவர் ஒரு சிறந்த வீரர் என்று நான் நினைக்கிறேன், ஆனால் 'எல்லா காலத்திலும் சிறந்த வீரர்' என மக்கள் அவரை கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

என்ன காரணம்
அஸ்வினிடம் உள்ள பிரச்னை என்னவென்றால் SENA என கூறப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ள மைதானங்கள் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாகும். ஆனால் இந்த நாடுகளில் அஸ்வின் ஒரு முறை 5விக்கெட் வீழ்த்தியதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் இந்திய ஆடுகளங்களில் மட்டுமே அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். இந்திய ஆடுகளங்கள் அவருடைய சுழலுக்கு ஏற்றார்போல் இருப்பதால்தான் அவரால் இங்கு விக்கெட் வீழ்த்த முடிகிறது எனத்தெரிவித்திருந்தார்.

அஸ்வினின் மீம்
மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் 'அந்நியன்' திரைப்பட மீம் மூலம் பதிலடி கொடுத்திருந்தார். அந்த மீம்மில் அம்பி, 'அப்படி சொல்லாதடா சாரி, மனசு எல்லாம் வலிக்கிறது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. அஸ்வினின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு அளித்திருந்தனர்.

மஞ்ச்ரேக்கர் பதில்
இந்நிலையில் அஸ்வினின் மீமுக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் பதில் கொடுத்துள்ளார். ட்விட்டரில் அவர், சாரி, இந்த காலத்தில் மிகவும் எளிமையான, கிரிக்கெட் குறிப்புகளை பார்ப்பதற்கு மனம் வலிக்கிறது சாரி என சிரித்த எமோஜியுடன் பதிவிட்டுள்ளார். மஞ்ச்ரேக்கர் மீது ரசிகர்கள் கொதித்தெழுந்த நிலையில் பிரச்னை சுமூகமாக முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications