Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல்ல தோனிக்கிட்ட இருந்து அத கத்துக்குங்க..ரசிகர்கள் குறித்த கோலியின் கருத்து..மஞ்ச்ரேக்கர் விளாசல்

புனே: ரசிகர்களின் கருத்துகள் குறித்து விராட் கோலி அலட்சியமாக பதில் கூறியதால் சர்ச்சை வெடித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் இன்று புனேவில் தொடங்குகிறது. முன்னதாக டி20 தொடரை 3 -2 என்ற கணக்கில் வென்று இந்தியா அசத்தியது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் ரசிகர்கள் குறித்து விராட் கோலி பேசிய வார்த்தைகளால் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடும் கோபமடைந்துள்ளார்.

 அணி மாற்றம்

அணி மாற்றம்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் தோல்வியடைந்தது. டெஸ்ட் போட்டி போன்று இல்லாமல் டி20ல் கடும் சவால் கொடுத்தபோது இந்திய அணி புதிய வியூகத்தால் அதனை சமாளித்தது. அந்த வியூகம் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓப்பனிங் களமிறங்கியது. கோலியின் இடத்திற்கு சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். இது குறித்து ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால் அது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

 என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்து குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கோலி, என் கிரிக்கெட் வாழ்வில் தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களின் கருத்துகளை கண்டுக்கொள்ளப்போவதில்லை. அவை அனைத்தும் முட்டாள்தனமானவை. அவர்களின் கருத்துக்கு பின்புலத்தில் என்ன நோக்கம் உள்ளது. என்ன காரணம் உள்ளது. எனவே அவற்றை கண்டுக்கொள்ளக்கூடாது என தெரிவித்தார்.

சர்ச்சை

சர்ச்சை

கோலியின் இந்த கருத்து குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரின் ட்வீட்டில், பொதுமக்கள் மற்றொரு சக குடிமகனின் விளையாட்டு குறித்து கருத்து கூறுகின்றனர். ஆனால் விராட் கோலி ரசிகர்களின் கருத்து முட்டாள்தனமானது எனக்கூறியுள்ளார். நீங்கள் சிறப்பாக ஆடும்போது அவர்கள்தான் பாராட்டுவார்கள். சொதப்பும் போது அவர்கள்தான் விமர்சிப்பார்கள். எனவே அதனை எப்படி பொறுமையாக கையாள வேண்டும் என தோனியிடம் இருந்து கோலி கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் போட்டி

ஒரு நாள் போட்டி

இரு அணிகளும் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இதற்காக அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் டி20 தொடரை போல விராட் கோலி ஓப்பனிங் களமிறங்கமாட்டார் எனத் தெரிகிறது. இந்திய அணியில் வழக்கமாக களமிறங்கும் ரோகித் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, March 23, 2021, 23:19 [IST]
Other articles published on Mar 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+