Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தெ.ஆ. எதிரான போட்டியில் அவர் வேண்டாம்..!! உத்தேச லெவனை அறிவித்து, காய் நகர்த்தும் முன்னாள் வீரர்

லண்டன்:உலக கோப்பை அணியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இந்திய அணியின் முதல் ஆட்டத்தில் ஆடும் 11 பேர் கொண்ட அணியை சஞ்சய் மஞ்ச ரேகர் தேர்வு செய்திருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 2019 உலக கோப்பை நாளை தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் ஆட்டத்துடன் தொடங்குகிறது. தென் ஆப்ரிக்கா அணி அதன் பிறகு ஞாயிறன்று வங்க தேசத்தையும் பிறகு 5ம் தேதி இந்தியாவையும் சந்திக்கிறது.

இந்திய அணி தன் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 11 பேர் கொண்ட அணியில் யாருக்கு எல்லாம் வாய்ப்பு தரப்போகிறது என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் முதல் போட்டிக்கான இந்திய உத்தேச லெவன் அணியை தேர்வு செய்திருக்கிறார்.

11 பேர் உத்தேச அணி

11 பேர் உத்தேச அணி

அந்த அணி விவரம் வருமாறு:ஷிகர் தவன், ரோகித் சர்மா, விராட் கோலி, விஜய் சங்கர், கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், முகமது சமி, பும்ரா, சாஹல் ஆகியோர் தென் ஆப்ரிக்காவுக்கான இந்திய அணியில் இடம் பெற்றால் போதும் என்று நினைக்கிறார்.

4ம் இடத்தில் விஜய் சங்கர்

4ம் இடத்தில் விஜய் சங்கர்

அவரின் அணி தேர்வில் பல ஆச்சர்யங்கள் இருக்கின்றன. ஷிகர் தவான், ரோகித், கோலி ஆகிய 3 பேரையும் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்திருக்கிறார். வழக்கம் போல இன்னும் சர்ச்சையான இடமாக இருந்து வரும் 4ம் இடத்துக்கு விஜய் சங்கர் தான் சரியான சாய்ஸ் என்று கூறி அவரை சஞ்சய் மஞ்சரேகர் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

ஜடேஜா, புவனேஷ்வர்

ஜடேஜா, புவனேஷ்வர்

கடந்த பயிற்சி போட்டியில் சதமடித்த ராகுல் அணியில் இடம்பெற வில்லை. நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடிய ஜடேஜாவும் இல்லை. புவனேஷ்வர் குமாரும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை. சிறப்பான அணியை தேர்வு செய்வதை விட்டுவிட்டு, இந்த 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து விட்டு, அதற்கான காரணங்களை வேறு கூறுகிறார் என்று ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சொதப்பல் சங்கர்

சொதப்பல் சங்கர்

வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ராகுல் 4வது வீரராக களமிறக்கப் பட்டார். நீண்ட நாட்களாக இந்திய அணியில் உலக கோப்பை தொடரில் எந்த வீரர் 4 வதாக களம் இறக்கலாம் என்ற குழப்பம் நிலவி வருகிறது. ஆனால், ராகுலின் இந்த அபார சதத்தின் மூலமாக இவர் இந்திய அணியின் 4வது வீரராக உலககோப்பை தொடரில் களமிறக்க வாய்ப்புகள் அதிகம் என்று பேசப்பட்டது. ஆனால் அவரை உத்தேச லெவன் அணியில் மஞ்சரேகர் எடுக்கவில்லை.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

உலக கோப்பை அணியில் தேர்வும் செய்யும் போதே விஜய் சங்கர் 4வது வீரரக களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரில் எதிர் பார்த்த அளவிற்கு அவர் சரியாக விளையாடவில்லை. அவரை மஞ்சரேகர் எந்த அடிப்படையில் தேர்வு செய்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்தியாவுக்கு ஒரு வெற்றி

இந்தியாவுக்கு ஒரு வெற்றி

2015ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணி தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஆடிய 12 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 8 போட்டிகளில் வென்றுள்ளது. ஆனால் உலக கோப்பை போட்டியில், மொத்தம் 4 ஆட்டங்களில் இந்திய அணி ஒரு போட்டியில் தான் வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 29, 2019, 18:41 [IST]
Other articles published on May 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+