For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனிமேலாவது திருந்துமா பிசிசிஐ.. உலககோப்பை முன் இப்படி நடந்தா என்ன பண்ணுவீங்க? மஞ்சுரேக்கர் கேள்வி

கொழும்பு : இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் ஃபோர் லீக் சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தசைப்பிடிப்பு காரணமாக பங்கேற்காமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே முதுகில் ஏற்பட்ட காயத்தினால் ஸ்ரேயாஸ் ஐயர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது தான் ஆறு மாதத்திற்கு பிறகு கிரிக்கெட் போட்டிக்கு திரும்பினார்.

Sanjay Manrekar asks BCCI to take final decision on injured prone shreyas iyer

உலகக் கோப்பை தொடர்க்கும் முன்பு ஸ்ரேயாஸ் ஐயர் மேட்ச் ப்ராக்டிஸ் ஈடுபடுவதற்காக அவருக்கு ஆசிய கோப்பை தொடரில் இடம் வழங்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் தனது உடல் தகுதியை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பாக அந்த போட்டி அமைந்தது. இந்த நிலையில் சூப்பர் போர் சுற்றில் டாஸ் போடுவதற்கு முன்பு ஸ்ரேயாஸ்க்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருப்பதாக ரோகித் சர்மா கூறினார்.

இது குறித்து பேசிய சஞ்சய் மஞ்சுரேக்கர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடிக்கடி முதுகில் காயம் ஏற்படுவது எதனால் என்றே புரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் ஸ்ரேயாஸ் ஐயர், உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இதுபோல் காயம் ஏற்பட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவது நிச்சயம் கவலை தரும் விஷயமாக இருக்கிறது.

பொதுவாக இது போன்ற காயங்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தான் ஏற்படும். ஆனால் பேட்ஸ்மேனுக்கு ஏன் அப்படி செய்கிறது என்றும் தெரியவில்லை. அதுவும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு காயம் அடைகிறார் என்றால் அவருடைய உடல் தகுதியில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறது. நல்ல வேலை இந்தியாவில் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஆனால் உலகக்கோப்பை தொடரில் இது போல் நடந்தால் நிச்சயம் அது இந்தியாவுக்கு பின்னடைவை தரும். இதனால் தேர்வு குழு சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் சில வீரர்களுக்கு பெரிய போட்டியில் விளையாடுவதற்கு முன் ஏதேனும் மனதளவில் பிரச்சினை ஏற்படும். அப்போது தலைவலிப்பது போலவும் உடல் வலிப்பது போலவும் தோன்றும். அது போல் ஏதேனும் மனதளவில் ஸ்ரேயாஸ்க்கு பிரச்சனை இருக்கிறதா என்பதை உரிய மருத்துவர்கள் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

Story first published: Sunday, September 10, 2023, 23:51 [IST]
Other articles published on Sep 10, 2023
English summary
Sanjay Manrekar asks BCCI to take final decision on injured prone shreyas iyer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+