Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. ஆஸ்திரேலிய பிக் பாஷ் லீக் அணியை வாங்கப் போகும் LSG உரிமையாளர் கோயங்கா

மும்பை: ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி குழுமம், ஆஸ்திரேலியாவின் முன்னணி டி20 தொடரான பிக் பாஷ் லீக்கை சேர்ந்த ஒரு அணியை வாங்குவதற்குத் திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் உலக அளவில் தங்களது கிரிக்கெட் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த சஞ்சீவ் கோயங்கா அதிரடி காட்டி வருகிறார்.

ஐபிஎல் போல ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக் பாஷ் லீக் தொடரில் அனைத்து அணிகளின் உரிமையும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் அந்தந்த மாகாண கிரிக்கெட் அமைப்புகளிடமே உள்ளன. அந்த அணிகளின் உரிமைகளை விற்க மாட்டோம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் பல ஆண்டுகளாக முரண்டு பிடித்து வந்த நிலையில் தற்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.

Sanjiv Goenka Eyes Australia s Big Bash League Team Purchase Melbourne Renegades in Target

தற்போது பிக் பாஷ் லீக்கில் தனியார் முதலீடுகளை அனுமதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் தவிர மெல்போர்ன் ஸ்டார்ஸ், ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் ஆகிய அணிகளும் தனியார் முதலீட்டை வரவேற்கத் தயாராக உள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மெல்போர்ன் அணியைக் கைப்பற்ற சஞ்சீவ் கோயங்கா தீவிரமாக முயன்று வருகிறார்.

பிக் பாஷ் லீக் தொடரில் விளையாடும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வாங்குவதே சஞ்சீவ் கோயங்காவின் தற்போதைய இலக்காக உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடக்கத் துவங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த அணியின் 100 சதவீத பங்குகளையும் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய நிர்வாகம் வரும் 2027-28 சீசனில் இருந்து அணியைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சஞ்சீவ் கோயங்காவிடம் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ20 தொடரில் டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் இங்கிலாந்தின் தி ஹண்ட்ரட் தொடரில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் உள்ளன. இதில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு 2026 சீசனில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

"எங்களுக்குள் இன்னும் பாக்கி இருக்கு".. கே.எல்.ராகுல் பற்றி டெல்லி கேபிடல்ஸ் உரிமையாளர் பேச்சு

ஐபிஎல் தொடரில் 2022-ல் லக்னோ அணியை 7090 கோடி ரூபாய்க்கு சஞ்சீவ் கோயங்கா வாங்கினார். முதல் 2 சீசன்களிலும் பிளே-ஆஃப் சுற்றுக்குச் சென்ற லக்னோ அணி, சமீபத்திய 2026 சீசனில் 14 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 10-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தது. கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

Story first published: Tuesday, September 8, 2026, 11:45 [IST]
Other articles published on Sep 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+