Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து ஒரு நாள் தொடர்... சஞ்சு சாம்சன், கரண் சர்மாவுக்கு வாய்ப்பு.. யுவராஜுக்கு கதவடைப்பு!

மும்பை: 2015ம் ஆண்டு உலகக் கோப்பையை மனதில் வைத்து இளம் ரத்தத்தை இந்திய அணியில் பாய்ச்சியுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்களை அதிகம் சேர்த்துள்ளனர்.

சீனியரான யுவராஜ்சிங் அணியில் சேர்க்கப்படவில்லை. அதேபோல கம்பீருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கேரளத்து வீரரான சஞ்சு சாம்சனுக்கும், இடது கை சுழற்பந்து வீச்சாளர் கரண் சரமாவுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆன சஞ்சு, ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்து வருபவர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரரும் கூட. ராகுல் டிராவிடின் பாராட்டுக்களைப் பெற்றவர்.

5 ஒரு நாள் போட்டிகள்

5 ஒரு நாள் போட்டிகள்

இந்தியாவும், இங்கிலாந்தும் தற்போது டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகின்றன. 3 போட்டிகள் முடிந்துள்ளன. இன்னும் 2 போட்டிகள் உள்ளன. அடுத்து ஒரு நாள் தொடரில் மோதவுள்ளன. 5 போட்டிகள் அதில் இடம் பெறுகிறது.

ஒரே ஒரு டுவென்டி 20

ஒரே ஒரு டுவென்டி 20

அதேபோல இரு அணிகளும் ஒரே ஒரு டுவென்டி 20 போட்டியிலும் விளையாடவுள்ளன. இதற்கான 17 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் தேர்வாளர்கள் தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.

யுவராஜ் - கம்பீர் இல்லை

யுவராஜ் - கம்பீர் இல்லை

இந்தத் தொடருக்கு யுவராஜ் சிங் சேர்க்கப்படவில்லை. அவரை நீக்கியுள்ளனர். அதேபோல கெளதம் கம்பீரும் பரிசீலிக்கப்படவில்லை.

இளைய பட்டாளம்

இளைய பட்டாளம்

அணியை முற்றிலும் இளைஞர்கள் அதிகம் உள்ளதாக பார்த்துப் பார்த்து தேர்வு செய்துள்ளனராம். 19 வயதான சஞ்சு சாம்சன்தான் அணியின் முக்கியத் தேர்வாகியுள்ளார். ராகுல் டிராவிடின் நேரடி பயிற்சியில் பட்டை தீட்டப்பட்டவர் சஞ்சு சாம்சன்.

ஆஸி தொடரில் ஜொலித்தவர்

ஆஸி தொடரில் ஜொலித்தவர்

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இந்திய ஏ அணியில் இடம் பெற்றிருந்த சஞ்சு, 7 போட்டிகளில் 244 ரன்களை எடுத்திருந்தார். ரஞ்சி போட்டியிலும 530 ரன்களைக் குவித்திருந்தார். 2 ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தானின் முதுகெலும்பாகவும் திகழ்ந்துள்ளார்.

கரண் சர்மா

கரண் சர்மா

அதேபோல ஐபிஎல் போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரராக வலம் வரும் கரண் சர்மா கடந்த ஐபிஎல் தொடரில் ஜொலித்தவர். 11 விக்கெட்களை அவர் வீழ்த்தியிருந்தார். ரயில்வே அணிக்காகவும் இவர் ரஞ்சி போட்டியில் ஆடி வருகிறார்.

அமீத் மிஸ்ரா இல்லை

அமீத் மிஸ்ரா இல்லை

தற்போது டெஸ்ட் போட்டியில் ஆடி வரும் அமீத் மிஸ்ராவுக்கு ஒரு நாள் போட்டிகளில் இடம் கிடைக்கவில்லை. அவர் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை.

இஷாந்த் சர்மா நீக்கம்

இஷாந்த் சர்மா நீக்கம்

அதேபோல டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற இஷாந்த் சர்மா ஒரு நாள் தொடரில் நீக்கப்பட்டுள்ளார். காயமே இதற்குக் காரணம். இருப்பினும் இவர் 5வது டெஸ்ட் போட்டியில் ஆடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதான் அணி

இதுதான் அணி

டோணி, கோஹ்லி, ஷிகர் தவன், ரோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ஆர். அஸ்வின், ஸ்டுவர்ட் பின்னி, புவனேஸ்வர் குமார், முகம்மது சமி, மோஹித் சர்மா, அம்பட்டி ராயுடு, உமேஷ் யாதவ், தவல் குல்கர்னி, சஞ்சு சாம்சன், கரண் சர்மா.

போட்டிகள் நடைபெறும் இடங்கள்

போட்டிகள் நடைபெறும் இடங்கள்

ஆகஸ்ட் 25ம் தேதி முதல் போட்டி பிரிஸ்டலில் நடைபெறும். அடுத்த போட்டி 27ம் தேதி கார்டிப்பிலும், 3வது போட்டி ஆகஸ்ட் 30ம் தேதி நாட்டிங்காமிலும், 4வது போட்டி செப்டம்பர் 2ம் தேதி பிர்மிங்காமிலும், கடைசி போட்டி செப்டம்பர் 5ம் தேதி லீட்ஸ் மைதானத்திலும் நடைபெறும். செப்டம்பர் 27ம் தேதி டுவென்டி 20 போட்டி பிர்மிங்காமில் நடைபெறும்.

Story first published: Wednesday, August 6, 2014, 10:13 [IST]
Other articles published on Aug 6, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+